பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 தமிழில் சிறுகதைகள் . 17

  ஆண், பெண்களின் உள்ளத்தை நன்றாக உணர்ந்து எழுதும் எழுத்தாளர்கள் பலர். அரு.இராமனதன் எழுதும் காதல் பற்றிய கதைகள் இத்தகையன. டி. கே. இனின்: எழுதிய துன்பக்கதை இவ்வகையில் எண்ணப்பட  வேண்டியது. மகளிருடைய மனநிலையைச் செவ்வனே ஒர்ந்து தெளிந்த அறிவோடு லகதிமி (திரிபுரசுந்தரி)யின் கதைகள் உள. உதாரணமாக, "விசித்திரப் பெண்கள்" "முதல் வகுப்பு டிக்கெட்" ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவர் அமைக்கும் சொல்லாடல்கள் அழகாகத் திகழ்கின்றன. ஏழைத் தொழிலாளருடைய மனநிலையை நன்கு உணர்ந்து எழுதுபவ்ர் தொழிலாளராயிருந்து எழுத்தாளரான விந்தன், துாரன், மு. வரதராசன், ராஜம்கிருஷ்ணன். கி.வா. ஐகக்காத னின் பவள மல்லிகை யையும் ராஜம் கிருஷ்ணனின்

பிஞ்சு மனம்' என்பதையும் இதனுடன் குறிப்பிடலாம்.

   கலைஞர் சிலருடைய முக்கிய விருப்பத்திற்குப் பாத்திர மாக இருப்பவர் கண்முன்னே இல்லாமல் மறைந்துவிடின், அவருடைய கலைத்திறன் மங்கி விடுகிறது என்னும் கருத்தைச் சில எழுத்தாளர்கள் தங்கள் கதைகளிற் காட்டியுள்ளார்கள். ஜீவாவின் "பிடில் காதப்பிரம்மம்' என்ற கதை யையும். புஷ்பத்துறை சுப்ரமணியத்தின் "ஜீவ சில” என்ற கதையையும் குறிப்பிடலாம்.
    சினிமாப்பட முதலாளி, டைரக்டர்களும் தரும் தொல்லை கள் சில கதைகளினூடே வருகின்றன. ஜீவாவின் மிரு காளினி கல்கியின் சுண்டுவின் சந்தியாசம் ஆசியவற்றில் இக்கருத்து வரக்காணலாம்.

தீண்டாமை ஒழிப்பு. விதவை மறுமணம், கலப்பு மணம் ஆகியவற்றைத் தூண்டிவிடக் கூடிய வகையில் எழும் கதை கள் உண்டு. கல்கியின் விஷ மந்திரம் திண்டாமையைப் பொசுக்கிவிடும் வகையில் அமைந்துள்ளது. காசி நகரப் பண்டாக்களுக்கு இக்கதையை மொழி பெயர்த்துக் காட்டு தல் வேண்டும். ஏ. எஸ். பி. ஐயர் எழுதிய வான் மலர்' என்னும் கதை விதவை மறுமணத்திற்கு வக்காலத்து வாங்