பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தமிழில்... வளர்ச்சியும்


கியதுபோல உளது. இவற்றைவிட மிகச்சிறந்தது புதுமைப் பித்தனுடைய "வழி". இக்கதையில் வரும் விதவை கண்கலங்கி, வதங்கிச் சாவினை வரவேற்கிறாள். படைத்த கடவுளையும் அநியாயமாகவும், சமத்துவமில்லாமலும், செய்யப்பட்டுள்ள மனித சட்டங்களையும் சபித்துவிட்டுச் சாகின்றாள். சுத்தானந்த பாரதியாரின் 'கலிமாவின் கதை' முஸ்லீம் பக்கிரி ஒருவனின் மகள் இந்துவை மணந்துகொண்டதைப் படம் பிடித்துக் காட்டுவது. அண்ணுத்துரையின் 'பேரன் பெங்களுரில்' என்ற கதை பிராமண விதவை முதலியார் குலத்து ஆசிரியரை மணந்து, ஒரு சூழ்ச்சியால் தந்தையின் ஆசியைப் பெற விழைவதுபோலக் காட்டுகிறது.


     நம்மின் மெலிந்தாரையும் தாழ்ந்தாரையும் கைதூக்கி விடவேண்டும் என்ற உணர்ச்சியை உண்டாக்கக்கூடிய, கதைகள் பல உண்டு. புதுமைப்பித்தன் எழுதிய 'தனி ஒருவனுக்கு’ என்ற கதையில் கோயிலில் ஆரவாரத்தோடு பூஜையும் நைவேத்தியமும் நடக்கிற வேளையில், பிச்சைக் காரன் எப்படி வெளியே வருந்தி மாய்கிறான் என்பது காட்டப்படுகிறது. அகிலன் எழுதிய “ கோயில் விளக்கு" என்னும் கதையில் இடியிலும் இருளிலும் மண்ணெண்ணெய் விளக்குக்கு வழியில்லாமல் சாம்பான் வீட்டில் குழந்தை பிறக்கிற அதே வேளையிலே எவ்வாறு ஒரு மண்ணென்ணெய் வியாபாரி ரேஷன் காலத்திலே ஆயிரம் ரூபாய் செலவில் கோயிலிலே மின்சார விளக்கு ஏற்றுகிறார் என்பது காட்டப்படுகிறது.


     கதையாசிரியர் சிலர் எழுதும் கதைகளில் இலக்கிய மனம் வீசுகிறது. பொதுமக்கள் மதிப்புக்கு அதிகமாக அசைபடாமல் தம்மை அறிந்து வாசித்து மகிழக்கூடிய மக்களுக்கு ஒத்ததாக மு. வரதராசனின் நடை அமைந்துள்ளது. அவர் எழுதிய 'விடுதலையா?' முதலிய கதைகளைக் காணலாம். "கட்டாயம் வேண்டும்” என்ற தலைப்பிலே, வேலையின்மையும் வறுமையும் இரந்தும் பெறாமையும் எவ்வாறு ஓர் இளைஞனைத் தற்கொலைக்குத் தூண்டிவிட்டன என்ற