பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறுகதை இலக்கியம் 19


கருத்து அழகாக அமைத்துக் காட்டப்பட்டிருக்கிறது. ஜீவாவின் 'முல்லை' மகுதூம் என்பவரின் 'திருமறையின் தீர்ப்பு' ஆகிய கதைகளில் நல்ல மணம் வீசக் காண்கிறோம்.


    எழுத்தாளர் சிலர் ஒரு கதைக்குள் கதை வருமாறு போல எழுதி, இரண்டையும் ஒன்றேபோலச் சாமர்த்தியமாகப் பொருத்திவிடுகிறார்கள். உதாரணமாக, அகிலன் எழுதிய 'பெண் பாவம்' என்ற கதையையும், எஸ். பி. ஷர்ஷன் எழுதிய 'கொடியும் கோலையும்' குறிப்பிடலாம்.


     பெரும்பான்மையான எழுத்தாளர்கள் சிறுகதையின் முடிவைக் கூறாமலேயே முடிக்கிறார்கள். வாசகர்களின் மனம்போல முடிவு தோன்றலாம். இன்னதுதான் முடிவாயிருக்கலாம் என்பதை ஊகித்து விடக்கூடியவாறே பல கதைகள் உள. ஆனால், ஏ. எஸ். பி. ஐயர், அண்ணாத்துரை சுத்தானந்த பாரதியார் ஆகியோர் கதைகளின் முடிவை நன்றாகவும், தெளிவாகவும் காட்டியேவிடுகிறார்கள். இது அவர்களுடைய கதைகளின் சிறப்பு.


     சிறுகதைகளைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தலாமா? என்பது பற்றி ஒரு சொல் : கருணாநிதி, அண்ணுத் துரை, ஏ. எஸ். பி. ஐயர், சுத்தானந்த பாரதியார் போன்றவர்கள் சமூகக் குறைகளைப் போக்குவதைப் பற்றித் "தமது கதைகளைப் படிக்கும் வாசகர்களைப் பொறுத்து விட்டுக்கொடுக்க வேண்டிய விஷயம் இது” எனச் சிறுகதை இலக்கண ஆசிரியர் பேரிபெயின் என்பார் கூறுவர். அரைகுறையாகப் படித்த மக்களே கிரம்பியுள்ள நம் நாட்டைப் பொறுத்தவரையில், வாசகர்கள் பலர் கதையாசிரிய்ர்கள் எல்லாவற்றையும் சொல்லித் தீர்த்துவிடவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் எனக் கூறுவது தப்பாகாது. அண்ணாத்துரையின் "சிறு கதைகள்" என்ற புத்தகத்தில் பிரச்சாரத்திற்கு, அதிக இடம எடுத்துக்கொண்டிருப்பது போலத் "கற்பனைச் சித்திரம்" என்ற புத்தகத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.