பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20
தமிழில்...வள்ர்ச்சியும்

எனக் குறிப்பிடலாம். தினமணிக் கதிரில் வெளியாகும் நிமிஷக் கதையையும் துருவி நோக்கினால், ஒரு கருத்தினை அல்லது தத்துவத்தை விளக்க அக்கதை பயன்பட்டுள்ளது என்பது விளங்காமற் போகாது.


மாயாவி என்பாரின் சிறுகதைகள் மக்கள் நெஞ்சப்பாங்கினை விறுவிறுப்பான, தெள்ளிய இனிய நடையில் விளக்கிக் காட்டுகின்றன, ”அவர் அமைக்கும் பாத்திரங்கள் உண்மையிலேயே செயல் ஆற்றுவது போலவும், பேசுவது போலவும் தோன்றுகின்றன. உதாரணத்திற்கு அவர் இயற்றிய பனித்திரை என்பதைக் குறிப்பிடுவேன்.


மாணவர்க்கு ஏற்ற கதைகளாக சி. எம். இராமச்சந்திரஞ் செட்டியார் எழுதிய “சிறுகதைத் திரள் ', கா. அப்பாத்துரை எழுதிய 'சமூகக் கதைகள்', ‘நாட்டுப்புறக் கதைகள்', பி.என். அப்புசாமி எழுதிய "விஞ்ஞானக் கதை கள்”, பாலூர் கண்ணப்ப முதலியார் எழுதிய “சிறுகதைக் களஞ்சியம் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.


உலகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுதப்பட்ட கதைகளைப் புதுமைப்பித்தன், கு.ப.ரா., ஆர்.வீழிநாதன், சேனாதிபதி, டி.என்.குமாரசாமி. ஏ.கே.ஜெயராமன் முதலியவர்கள் மொழி பெயர்த்துத் தந்துள்ளார்கள். 1946இல் எஸ். குருசாமி " இந்தியச் சிறுகதைகள் " என்ற தலைப்பில் பல்வேறு இந்திய மொழிகளில் அமைந்த கதைகளை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்.


இலங்கை எழுத்தாளர்களில் அரியரத்தினம், வைத்திலிங்கம், சம்பந்தம், இலங்கையர் கோன்' ஆகியோர் தீட்டும் கதைச் சித்திரங்கள் படித்து இன்புறத்தக்கவை. இவர்கள் அக்கதைகளைப் புத்தக வடிவிற் கொண்டுவருவார்களானால் அதிக நலன் விளையும்.


சிறுவர்க்கு உரிய வகையில் கதை எழுதுவோரில் தலைசிறந்தவராக அழ. வள்ளியப்பா, அம்புலி மாமா, தமிழ்வாணன், கண்ணன் ஆகியோரைக் குறிப்பிடலாம். -