பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆசிரியரைப் பற்றி

அமிர்தலிங்கம், பார்வதி அம்மாள் ஆகியோரின் மகனாக 1907ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் குடந்தையில் பிறந்தார். குடந்தைக் கல்லூரியில் 1928ஆம் ஆண்டு பி. ஏ. பட்டம் பெற்றார். மாநிலத்திலேயே முதல்வராகத் தேறி, டாக்டர் ஜி. யு. போப் பதக்கமும், பிராங்கிளின் பதக்கமும் பெற்றார். அதன் பின், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம். ஏ. பட்டம் பெற்றார். தொடக்கத்தில், சென்னை அரசினர் இஸ்லாமியக் கலைக் கல்லூரியிலும், பாலக்காடு அரசினர் கலைக்கல்லூரியிலும் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரை யாளராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். பணி புரிந்த காலத்திலேயே, 1942இல் டாக்டர் (Ph. D) பட்டம் பெற்றார். இவரே தமிழில் முதன் முதலில் ஆராய்ச்சி வழியில் டாக்டர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர். இடைக்காலத் துணைவேந்தராக 1948ஆம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பெருமையும் இவருக்குரியது. 1955ஆம் ஆண்டில், பல்கலைக் கழகப் பயிற்றுமுறை, இயங்குமுறை, ஆட்சித் திறன் ஆகியவற்றை அறிந்து வர இலண்டன் மாநகருக்கு அனுப்பப்பட்டார். 1956இல் மலேசியா போன்ற கிழக்கத்திய நாடுகளுக்குச் சென்று தமிழ் மணம் பரப்பி வந்தார். 1956இல் மாநிலத் தமிழாசிரியர் கழகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1958இல் சென்னை மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்