பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலைப்பற்றி

    என்னுடைய கணவர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்களால், எழுதப்பட்ட சிதுகதையைப் பற்றிய சில கட்டுரைகளை நெறிப்படுத்தி, "தமிழில் சிறு கதையின் தோற்றமும் வளர்ச்சியும்" எனும் ஒரு நூலாக வெளியிடுவதில் நான் பெருமகிழ்வடைகிறேன். சிறுகதை இலக்கியம் இந்த நூற்றாண்டில் செல்வாக்குப் பெற்ற இலக்கியக் கூறாகக் கருதப்படுவதால், அதுபற்றி ஆராய்ந்த என் கணவரது கட்டுரைகளை நூல் வடிவில் வெளியிட்டால், தமிழ் இலக்கிய அன்பர்கள் பயன்பெறுவர் எனக் கருதியே இதை வெளியிடுகிறேன். இதற்குரிய நூல் வடிவம் கொடுத்து, செம்மைப்படுத்திய பேராசிரியர் பிளோரம்மாள் (தமிழ்த்துறைத் தலைவர், ஸ்டெல்லா மேட்டிடுயூனா மகளிர் பயிற்சிக் கல்லூரி, சென்னை - 4), ம. செ. இரபிசிங் (தமிழ்த் துணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி, சென்னை-5) ஆகியோருடைய உதவியை என்றும் மறவேன். ஏற்கனவே, என் கணவரது கட்டுரைகளைச் சேர்த்து "செங்கோல் வேந்தர்’ எனும் நூல் வெளியிடுவதற்கும் இவர்களே துணை செய்தார்கள்.

நூலை நல்ல முறையில் அச்சிட்ட ஒப்புரவு அச்சகத்தாருக்கும் நன்றியைச் செலுத்திக்கொள்கின்றேன்.

குடங்தை 15-4-'77

சி. பெரியகாயகி சிதம்பரனாதன்