பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்பாசிரியர் முன்னுரை

தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்களது கட்டுரைகளை நெறிப்படுத்தி, நூலாக உரு வெடுப்பதற்குத் துணைசெய்தவற்கான வாய்ப்புக் கிடைத்தது எங்கள் பெரும்பேறே. அன்னாரின் ஆழ்ந்த புலமையின் வாயிலாக வெளிப்பட்ட நூற்கள் பலவற்றினால் தமிழகம் பெரிதும் பயன்பட்டதுண்டு. மேலும் பயன்பெறும் வகையில், இன்றைய இலக்கியமாகிய சிறுகதையைப் பற்றி அவரது ஆய்வுக் கட்டுரைகளை முறைப்படுத்தி நூல் வடிவு கொடுத்திருக்கிறோம். அளவிலே சிறிதாக இருந்தாலும், கருத்துச்செறிவிலே பெருநிறைவையும், பெரும்பயனையும் நல்கும் என்பதில் ஐயமில்லை. சிறுகதை ஆய்வுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும், இலக்கிய அன்பர்களுக்கு நல்ல இலக்கிய விருந்தாகவும் இந்நூல் அமையும் என்பது திண்ணம்.

      மூன்றாவது அகில இந்திய எழுத்தாளர் மாநாட்டில் சிறுகதையைப் பற்றிப் பேசிய பேச்சின் சுருக்கமும், பல இலக்கிய ஏடுகளில் சிறுகதையைப் பற்றி எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
      தமிழில் சிறுகதையைப் பற்றி ஆய்வுக் கண்ணோட்டத்தோடு, சிந்தித்து, தரம் அறிந்து வகைப்படுத்தித் திறனாய்வு செய்த முதல் தமிழ்ப் பேரறிஞர் இவரே. இந்நூல், சிறு கதையைப் பற்றிய பொதுச் செய்திகளை அறிவதற்கும் ,