பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறுகதை இலக்கியம் 5

நிகழ்ச்சி

   இவ்வாறு எழுதப்படும்போது காட்டப்படும் நிகழ்ச்சி கனவாகவோ நினைவாகவோ இருக்கலாம். ஆயினும், கனவும் நினைவுபோல இருக்கும்படி செய்யவல்ல திறமுடைய எழுத்தாளர்களுக்குச் சிறந்த மதிப்பு உண்டு. சிறுகதை ஒவ் வொன்றிலும் ஒரேயொரு நிகழ்ச்சி சிறந்து இடம்பெறுதல் நல்லது. அதனை ஒட்டிய பல்வேறு நிகழ்ச்சிகளைப் பற்றியும் விளைவுகளைப் பற்றியும் ஆசிரியர் கவலை கொள்ளுதல் கூடாது. வாசகர்கள் எதிர்பார்த்தலும் கூடாது. ஆனால், வல்லவனுகிய ஒரு எழுத்தாளனுக்குச் சில நிகழ்ச்சிகளையும் ஒன்றேபோல கோக்கும் திறம் அமைந்திருத்தல் உண்டு. கதை ஒவ்வொன்றையும் முற்றுற முடித்துக்காட்டவேண்டிய அவசியம் இல்லை. கதையை இன்னும் வளர்த்தியிருந்தால் ஒன்றும் பெரியதொரு பயன் விளைந்திருக்க மாட்டாது என்ற கம்பிக்கை வாசகர்களுக்கு ஏற்படக்கூடிய வகையில் முடிவு இருந்தாற் போதும். எடுத்துக்காட்டி விரும்பிய பாத்திரத்தின் இயல்புகளில் ஒரு பகுதியைச் செவ்வன் படம் பிடித்துக் காட்டுவது போதுமானது. சிறுகதைகளில் ஒரே நோக்கமும் ஒரே விளைவுந்தான் எதிர்பார்க்கப்படுகின்றன. (“Singleness of aim and singleness of effect are the two great canone by which we have to try the value of a short story - as a piece of art.” - Henry Hudson in his introduction to the study of literature. P. 445). நோக்கம் கிறைவேறும் வகையில் கதை அமைந்திருத்தல் போதுமானது. பல எழுத்தாளர்களுக்கு இது கைவரப்பெறாததால் தான் புதினங்களை எழுதத் தலைப்படுகிறார்கள் என்று சொல் வது தவறாகமாட்டாது.

பயன்

   சிறுகதை எழுதுகிறவர்கள் கதை பொய் என்ற

உணர்ச்சி வாசகர்கள் இடத்தில் உண்டாகும்படி எழுதுவார்களேயானால், அக்கதையில் நன்மைகள் பல உண்டு என்றா