பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்பு

101


அதிருக்கட்டும். அந்த யானை எந்தப் பக்கம் போயிற்று? அடே! எந்தப் பக்கம் போனால் என்ன? முதலில் மரத்தின்மீது ஏறு. கொஞ்சம் பொறுத்திருந்து அப்புறம் செல். நான் அந்த யானையைக் காணவேண்டும். காணவேண்டுமா? ஆம். நான் அதை வேட்டையாட வந்தேன். என்னப்பா வேடிக்கையாக இருக்கிறதே, நீ சொல்வது; யானை வேட்டைக்குத் தனியாகலா வந்தாய் கையில் ஒன்றுமில்லையே? கையிலிருந்த வேலை அதன்மீது வீசினேன், அதனோடு ஒடிவிட்டது யானை.

என்ன! நீ எறிந்த வேலா அதன் துதிக்கையில் பாய்ந்திருப்பது?

ஆம், வயிற்றில் பாய்ந்திருந்தால் யானை அங்கேயே வீழ்ந்திருக்கும். குறி சிறிது தவறி, துதிக்கையில் பாய்ந்துவிட்டது, இப்போதும் என்ன? எளிதாகச் சென்று வேலைப் பிடுங்கி மறுமுறையும் குத்தினால் யானை வீழ்ந்துவிடும்.

தம்பி! இனி அது முடியாது. புண்பட்ட யானை புலிபோலச் சீற்றம் கொள்ளும். ஒரிடத்திலும் தங்காமல் ஒடிக்கொண்டேயிருக்கும். அதைத் தேடி அலைவது வீண் வேலை.

உங்களோடு இவ்வளவு நேரம் பேசியதுதான் வீண் வேலை. நான் வந்த வேகத்தில் ஒடியிருந்

தால் அந்த யானையை இதற்குள் பார்த்திருப்

பேன். இந்த நேரத்திற்குள் அது எங்குச் சென்றதோ தெரியவில்லை!