பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

தமிழ்ச் செல்வம்


நான்கு காதம் சென்றாலும் அதைக் காண்பது அரிது. ஒரு வேளை, திரும்பவும் வழிதவறி இந்தப் பக்கம் வந்தாலும் வரக்கூடும். தேடிப்போ, ஆனால் உன் உயிருக்கு அபாயம் உண்டு. அதில் எச்சரிக்கையாயிரு. - உங்கள் ஆலோசனைக்கு நன்றி. உயிர் தமிழல்ல. இதுவரை யானையின் காலடியைப் பின்பற்றி இங்கு வந்து சேர்ந்தேன். இக்காட்டில் யானையின் காலடி பதியவில்லை. இங்கிருந்து யானை எந்தப் பக்க்ம் போயிற்று என்பதை மட்டும் சொல்லுங் கள். உதவியாக இருக்கும். சரியப்பா சரி! அதோ அந்தத் தேக்குத் தோப்புத் திடலின் பக்கம்தான் ஒடிற்று. போய்ப் பார்.

காட்சி : 4

குடிசை (வேடர் தலைவன் முதலியோர்) காடரே! இருவரில் யார் வெற்றி பெறுவர் என்பது உமது எண்ணம்? முதல்வரே வெற்றி பெறுவார். இதிலென்ன தடை? (பொன்னப்பன், முயலைப் பிடித்தவண்ணம்

தந்தையை வணங்குகிறான்.)

அப்பா! இதோ இந்த முயல் என்னை ஏமாற்றி

விட்டு ஒட எல்வளவோ முயற்சித்தது. ஒரே

அம்பில் வீழ்த்தினேன். பொன்னப்பன் குறிக்குத் தப்ப முடியுமா என்ன? (மகிழ்ச்சியோடு தலையைத் தடவிக் கொடுத்து) தம்பி சின்னப்பன் எங்கே?

நான் அவனைப் பார்க்கவே இல்லையே! இன்னும் வரவில்லையா?