பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்பு

103


(சின்னப்பன் தலையைத் தொங்க விட்டுக் கொண்டு வாடிய முகத்துடன் வருகிறான்.1 இளையவர் ஏன் இப்படி வாடிய முகத்துடன் வருகிறார்? சின்னப்பா! என்ன செய்தி?

அப்பா? யானை வேட்டையாட எண்ணி யானைக் காட்டிற்குச் சென்றேன். வேட்டையும் கிடைத்தது. வேலையும் வீசினேன். குறி தவறிப் போய்விட்டது. யானையும் பிழைத்து ஓடி விட்டது. நான் வேலையும் இழந்துவிட்டு, வெறுங்கையோடு வந்திருக்கிறேன். அப்பா! மன்னிக் வேண்டும். நான் தோல்வியடைந்து விட்டேன். த்சு ஆஹா! (தன் மகனை மார்போடு அணைத்து) மகனே! இதுவா தோல்வி? அல்ல அல்ல! யானை வேட்டைக்கா சென்றாய்? நீயே வீரன்! என் வாழ்நாளிலே நான் ஒரு நாளும் தனியே யானை வேட்டைக்குச் சென்றதில்லை. உன் பாட்டனும் தனித்துச் சென்றதில்லை அவ்வளவு துணிவு எங்களுக்கு ஏற்பட்டதில்லை. செயற்கரிய செய்தாய் நீ! சிறிய செயலில் முனைந்து வெற்றி பெறுவதைவிட, பெரிய செயலில் முனைந்து தோல்வியடைவது சிறப்பு. வேட்டை என்றதும் உள்ளத்தில் உயர்வை எண்ணினாய்; பெரிதை முயற்சி செய்தாய். தோல்வியடைந்தாய் என்றா லும், நீயே சிறந்தவன்; நீயே வீரன்! சின்னப்பன் வீரன் மட்டுமல்ல, தலைவரே! வீரர் களின் தலைவன்!. தலைவர் சின்னப்பன் வாழ்க! கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது.