பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 1

ஆய்ச்சியர் குரவை (மதுரை நகரில் இடைக்குல மகளிர் பலர் கண்ணகி காணும்படி குரவை பாடி ஆடிக் கொண்டிருக்கின்றனர்.) கன்று குனிலாக் கனியுதிர்த்த மாயவன் இன்று நம்மானுள் வருமே லவன்வாயிற் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி; பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்கு நம்மானுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி! கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லை நம்மானுள் வருமேல் அவன் வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி!

உள்வரி வாழ்த்து

(பாண்டியன்) கோவா மலையாரம் கோத்த கடலாரம் தேவர்வகோன் பூணாரந் தென்னர்கோன் மார்பினவே தேவர் கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக் கோகுலம் மேய்த்துக் குருந்தொசித்தான் என்பரால்.

(சோழன்) பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் |டான்

மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னந் திகிரிப் பொருபடையான் என்பரால்.