பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

தமிழ்ச் செல்வம்


ஐயை நான் வைகைக்கு நீராடப் போயிருந்தேன்.

அங்கு, அரசியின் காற்சிலம்பைத் திருடியவன் கோவலனே எனக் கருதி, அவரைக் கொலை செய்து விட்டதாகக் கேள்விப்பட்டேன்.

கண்ணகி : தெய்வமே! இது உண்மையா?

பலரும்

(நிலத்தில் விழுகிறாள் 1

ஐயோ பாவம்!

கண்ணகி : ஐயோ! நான் என்ன செய்வேன்? நாதா!

உமக்கா இக்கதி? இனி என் கதி? என்னைத் தனித்துவிட்டு எங்குச் சென்றீர்? இனி நான் எப்போது காண்பேன்; பாடுபட்டுப் பிழைக் கலாம்’ எனக் கூறி, நாடுவிட்டு நாடு அழைத்து வந்ததெல்லாம் கூடுவிட்டுப் போகத்தானா? அன்பரே, இனி யான் என்ன செய்வேன்? (அழுகிறாள். அமைதி.]

(பொங்கி எழுந்து) ஆம், இனி தான் என்ன செய் வேன்? கணவனோடு தீயிடை மூழ்கி வெந்து அழிவேனா? அல்லது கைம்மை நோற்றுப் பல துறைகளிலும் நீராடி அலைந்து திரிந்து அழுது

ஒழிவேனா? மன்னவன் நெறி இழந்தான்;

அன்பனை நான் இழந்தேன்; உள்ளம் கொதிக் கிறது... (உறுதியோடும்) அறக் கடவுள்! (இம்) அறக்கடவுள் எனப்படும் அறிவற்றவனே! பாவத்தைப் பின்பற்றிச் செல்லும் பாண்டின் தவறு செய்தலால் யான் அழுதழுது ஒழிய வேண்டுமா? இல்லை; ஒருபோதுமில்லை! நெறிக்கு நெறி! பழிக்குப் பழி!...குரவைக் கூத்தினுள் வந்து திரண்ட இடைக்குல மகளிரே! எல்லோரும் கேளுங்கள். ஆயர் மகளிரே! அனைவரும் கேளுங்கள். இவ்வுலகுக்கு ஒளிவீசும் கதிரவன் அனைத்தையும் அறிந்திருப்பான், கேளுங்கள்.