பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

தமிழ்ச் செல்வம்


பெண்-3 : அயல் நாட்டிலிருந்து இந்நாட்டிற்கு வந்த பெண்ணுக்கு இன்று நாம் விளைத்த துன்பம் எவராலும களைய முடியாது.

பெண்-1 : அம்மம்மா! ஆம்; ஆம்! களையாத துன்பத் தைக் கண்ணகிக்குக் காட்டி, வளையாத செங் கோல் வளைந்தது இந்நாட்டில்! என்ன செய்வது?

பெண்-2 : செம்பொன்னாற் செய்த சிலம்பொன்றைக் கையேந்தி நம்மைக் கெடுப்பதற்கு ஒரு புதுத் தெய்வம் வந்திருப்பதுபோலத் தோன்றுகிறது. நம் நாட்டிற்கு இதனால் என்னென்ன கேடு விளையுமோ? யாரறிவார்?

காட்சி : 3

கொலைக்களம்

கண்ணகி : எது? எந்தவிடம்?

சிலர் : அதோ அந்த மரத்தடியில்தான், தாயே!

கண்ணகி: எங்கே? எங்கே? அந்தோ! கொடுமை. கொடுமை! ஆ.நாதா இதுவரை உமது துன்பத்தைக் கண்டு கொண்டிருந்த சூரியன்' இனி என் துன்பத்தைக்கான விரும்பாமல்தான் மலையேறிச் சென்று விட்டானா! உமது முக'ஒளியைச் சரியாகக் கூடக்கான முடிய வில்லையே! உம்மைத் தழுவும் பேறு எனக்கு இன்றுதான் கிடைத்ததோ! காலையில் உமது அன்பொழுகும் பேச்சினைக் கேட்டு மகிழ்ந் தேன்... மாலையில் குருதி ஒழுகும் உடலைத் தழுவி அழுகிறேன்! பாவி! நான் பெற்ற பேறு இதுதானா? நாதா! மலர் மாலையிற் புரண்ட மார்பகம் மண்ணிற் புரள்வதா? கண்ணிருகுத்து நிற்கும் என் கண்முன்னே நீர் புண்ணிருகுத்துப் புழுதியிற்கிடப்பதா? பேசுங்கள் நாதா! நமக்கு. ஏன் இக் கதி? என் துயரத்தைக் கண்டு மெளனம்