பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பு

109


எதற்கு? பேசுங்கள் நாதா! பேசமாட்டீர்களா ? உங்களைப்போலவே இவ்வூரும் வாய் மூடிக் கிடக்றதே! பழி துாற்றும் வகையில் பாண்டியன் தவறு செய்தான்; அவனால் வந்த வினை இது' என்று ஊராரும் எவரும் சொல்வார்களா?

இவ்வூரில் பத்தினிப் பெண் உண்டா? இல்லையா? சான்றோர்கள் உண்டா? இல்லையா? தெய்வமும் உண்டா? இல்லையா?

(ஒரு மணி ஒலி!

கண்ணகி உன் மலர்முகம் வாடியிருக்கிறதே! வருந்தாமல் இரு.

கண்ணகி : என்ன இது? இது சொல்லத்தான் உயிர்

ஊசலாடிக்கொண்டிருந்ததா? அல்லது மாயமோ! கனவோ! அல்லது என் உள்ளத்தே தோன்றிய மயக்கமோ! ஒன்றும் விளங்கவில்லையே!... இனி எங்குச் சென்று என் கணவனைத் தேடுவேன்...? ஆ நாதா? இல்லை. இது மெய்யுரையன்று. என் காய் சினம் தணிந்தாலன்றிக் கணவனைக் கைகூடேன்... என்சினம் தணிவதற்குரிய ஒரே வழி, கொடுமை விளைவித்த பாண்டியனைக் கண்டு, குற்றம் விளைவித்ததற்குக் காரணம் கேட்பதே! ஆம்; இப்போதே செல்லுகிறேன், பாண்டிய மன்னனின் பாழ்மனைக்கு.

காட்சி : 4

பாண்டியன் அரண்மனை

கண்ணகி : (வாயில் காப்போனை நோக்கி) வாயில் காப்

போனே! வாயில் காப்போனே! முறைபிறழ்ந்த மன்னனது நெறிபிறழ்ந்த அரண்மனையின்