பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பு

111


நெடு : பெண்ணணங்கே கள்வனைக் கொல்லுதல்

கடுங் கோலல்லவே? கண்ணகி : அறத்தின் நெறியறியா அரசே! என் கணவன் கள்வனலலன். அவன் விற்க வந்த பொற்சிலம்பு, என் காற்சிலம்பு. அதனுள்ளே ஒலியிடுகின்ற பரல்கள் மாணிக்கங்கள். நெடு : கண்ணகி கூறியது மிக்க நல்லது. நமது சிலம்பு முத்துக்கள் நிறைந்தது. எங்கே அச்சிலம்பைக் கொண்டு வாருங்கள். (சேவகன் கொண்டு வரு கிறான்) ஆம். இதுதான் கள்வனிடமிருந்து கைப் பற்றியது கண்ணகி! இதோ சிலம்பைப் பார். கண்ணகி : நான் பார்ப்பதென்ன? அரசே! இதோ உடைக்கிறேன். நீரே பாரும் அதனுள்ளிருக்கும் மாணிக்கங்களை. (சிலம்பைத் தரையில் அடித்து உடைக்கிறாள்)

கண்ணகி : கோல் கோடிய மன்னா! உன் கையிலிருப்

பதும் ஒரு செங்கோலா? (கோல் சரிகிறது.) குற்றம் புரிந்த கொற்றவனே! உனக்கும் ஒரு சந்திர வட்டக் குடையா? (குடை முறிகிறது. ) குறை தவறிய மன்னா! உன்னைத் தாங்கிக் கொண்டிருப்பதும் ஒரு அரச இருக்கையா? (அரச இருக்கை ஆடுகிறது )

நெடு : யானோ அரசன்? யானே கள்வன்! பழுதற்ற மன்னவர்களால் ஆளப்பெற்று வந்த பாண்டி நாட்டு ஆட்சி, இன்று என்னால் பிழைபட்டுப் போயிற்று யான் இனி வாழேன்! கெடுக என்

ஆயுள்! ஆ. (என்று அலறி அரச இருக்கையிலிருந்து

விழுகிறான்.)

கோப் : ஐயோ! அரசே! ஆவி பிரிந்தீரா? என்னை விட்டு விட்டா? கணவனை இழந்தோர்கள் காண்