பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பு

113


வள்ளி :

செல்வி: வள்ளி :

செல் :

தீமைகளைத் தீய்க்கும் தீயே! பசு, பத்தினிப் பெண்டிர், பாலர், பிணியாளர், அறவோர் அனைவரையும் தீண்டாதே! தீத்திறந்தார்

பக்கமே சென்று தீய்த்தெரி. இதோ நான்

கொற்றவை கோவிலில் பொன்வளை உடைப் பேன். மேற்கு நோக்கி நடந்து, மேலை மலை மீது ஏறி, இவ்வுடலைப் போக்கிக் கணவனை அடைவேன். அந்தோ! நான் கீழ்வாயிலில் கணவனோடு புகுந்தேன்! மேல்வாயிலில் தனித் துச் செல்கிறேன்!...

காட்சி : 5

குன்றக் குரவை

(உறுப்பு, மலைவாணர்கள்.)

செல்வி, ஒரு சேதி கேட்டியா? வா வள்ளி, என்ன சேதி? அருவியில் நீராட எண்ணிச் செங்குன்றுக்குப் போனேன். குன்றுக்கு அடியில் வேங்கைரம நிழலில் பெருந்துயரோடு பெண்ணொருத்தி நின்றாள். பூ உதிரப்பெற்றுப் பெருமூச்சு விட்டாள். யாரம்மா? என்றேன். அவள், 'சோழ நாட்டில் தோன்றி, பாண்டி நாட்டைத் தீய்த்து, சேரநாடு சேர்ந்த தீவினையாட்டி" என்று கூறினாள். அவ்வளவுதான். ஒரு பெரு முழக்கம் முழக்கி, என் கண்ணெதிரே ஓடி, குன்றேறி மறைந்தாள். நான் பயந்தோடி வந்தேன்.

வள்ளி பயப்படாதே! அது நம்மை வாழ்விக்க . வந்த தெய்வம். நாம் குரவை பாடி அத்தெய் வத்தை வாழ்த்தியாக வேண்டும். எல்லோரை யும் கூப்பிடு.

த.-8