பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பு

115


வேட்டு : வள்ளி! குரவையாடினது போதும். நமது சேரர் பெருமான், அரசி, அமைச்சர், இளங்கோ ஆகியவர்களுடன் மலைவளங் காணப் பேராற்றங் கரைக்கு வந்து, மணற்குன்றில் தங்கியிருக் கிறார்களாம். வா. ஒடிப் போய்ப் பார்க்கலாம். வள்ளி : ஆம், பாவாயி! எல்லோரும் வாருங்கள். நாம் கண்ட காட்சியையும் அரசர்க்கு அறிவிக்கலாம்.

காட்சி : 6 பேராற்றங்கரையில் உள்ள மணற்குன்று

(உறுப்பு : .ெ ச ங் கு ட் டு வ ன், வேண்மா, இளங்கோ, வில்லவன் கோதை முதலியோர்.1 அனைவரும் : வாழ்க மன்னவா! வாழ்க நின் கொற்றம்!

வணக்கம். செங்குட்டுவன் வருக, மலைவாணர்களே! அனைவரும் நலம்தானே? வேண்மா! மலைவளங் காணவந்த மாதரசியாகிய உனக்கு, இவ்விடத்திலேயே பல் வளமுங் காட்டப்படுகிறது; பார் இதோ மலை வாணர்கள் கொண்டுவந்து வைத்துள்ள யானைத் தந்தம், அகிற்கட்டை. மான் மயிர்க் கவரி, சந்தனக் கட்டை, சிந்துாரக் கட்டி, நீலக் கற்கள், அழகிய கஸ்தூரி, ஏலக்காய், மிளகுக்கொடி, கூவைக்கிழங்கு, தேமாங்கனி, பலாப்பழம், கரும்பு, தேன், வாழை, பூங்கொடி, புலிக்குட்டி, யானைக்குட்டி, மான்குட்டி, குரங்குக்குட்டி, மயில், கானக்கோழி, பச்சைக்கிளி முதலியவை களையும் பார்! அதனோடு விளையாடி மகிழ். செங் : மலைவாணரே! மழைக்குறை, வளக்குறை,

மக்கட் குறை ஏதேனும் உண்டா? மலைவாணர் : இல்லை மன்னவா! தெய்வக் குறைதான் இருக்கும்போலத்தோன்றுகிறது. பாண்டி நாட்டி