பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

தமிழ்ச் செல்வம்

 லருந்து ஒரு பெண்தெய்வம் இம்மலையேறி வந்து, வேங்கை மரத்து நிழலில் நின்று, அனல் கக்கும் மூச்சோடும் துயர்ப்பட்ட மனத்தோடும் பெருமுழக்கம் முழங்கி, அதோ அக்குன்றேறி மறைந்து போயிற்று! என்ன நடக்குமோ? அஞ்சுகிறோம். பாண்டி நாட்டுப் பெண்...துயர்ப்பட்ட மனம்... மலையேறி வந்து குன்றேறி மறைந்தாள்...இது என்ன? என்றும் கேளாத செய்தியாக இருக் கிறதே?

(சாத்தனார் வருகிறார்)

சாத்தனார் : ஆம் அரசே! என்றுங் கேளாத செய்தி

செங் :

சாத் :

தான். வணக்கம். வரவேண்டும் சாத்தனாரே வர வேண்டும். ஏது இவ்வளவு தொலைவில்?

நான் இங்கு வந்தது இளங்கோவின் தமிழ்ப் புலமையில் திளைத்துச் சுவைப்பதற்கு. ஆனால், இப்போது மலைவாணர்கள் தங்களிடம் கூறிய செய்தி எனக்கு ஒரு புதிய வேலையையும் பண்ணி விட்டது.

என்ன அது?

காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகி தன் கணவன் கோவலனுடன் மதுரைக்கு வந்தாள். மனைவியின் காற்சிலம்பை விற்றுவரக் கோவலன் கடைவீதிக்கு வந்தான். அரசியின் களவுபோன காற்சிலம்புதான் இது என அரசர்க்கு வஞ்சிப்பத் தனால் அறிவிக்கப் பெற்றது. பாண்டியன் நெடுஞ்செழியன், கோவலனுக்குக் கொலைத் தண்டனை விதித்தான். கோவலன் கொலை யுண்டான்.

பாவம்! பிறகு?