பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பு

117


அதை அறிந்த கண்ணகி. கதறித் துடித்துக் கணவனைக் கண்டாள். அவன் உடலில் உதிரம் பெருகிற்று. அவள் உள்ளத்தில் வீரம் பெருகிற்று. பழி போக்க எண்ணினாள். சூளுரை புகன்றாள். அதன் இணைச்சிலம்புடன் அரண்மனை சென்றாள். அரசனைக் கண்டாள்.

என்ன துணிவு! பாண்டியன் நெடுஞ்செழியன் கண்ணகியைக் கண்டதுமே கலங்கினான். அவளுடைய உடம்பில் படிந்திருந்த புழுதியும், விரித்துக் கிடந்த கூந்த லும், கையில் இருந்த சிலம்பும், கண்ணில் வடிந்த நீரும், அவனை நடுங்கச் செய்தன. தேரா மன்னா!' என்றதும் திடுக்கிட்டான். சிலம்பு உடைபட்டது. மாணிக்கப் பரல்கள் வெளிவந்து மன்னன் தவறை உணர்த்தின. கோல் வளைந்து, குடைமுறிந்து அரச இருக்கை ஆடிற்று. நீதி பிழைத்த மன்னன் உயிர் பிழைக்க மறுத்து உயிர் நீத்தான். கோப்பெருந்தேவியும் அவனடியில் வீழ்ந்து, தன்னுயிரால் அவனுயிரைத் தழுவி மறைந்தாள். என்ன கோரமான விளைவு!...பின்பு? கற் பரசி கண்ணகி வயிறு எரிந்தது; மன்னன் மனை எரிந்தது; மதுரை நகரம் எரிந்தது. வையைக் கரையோரமே மேற்கு நோக்கி நடந் தாள். இந்நாட்டிற்குத் தான் வந்திருக்க வேண்டும். என்ன பிழை என்ன கொடுமை! என்ன அநீதி! பாண்டி நாட்டிலும் அறம் பிழைக்கப்பட்டது!" என்ற செய்தி என் உள்ளத்தைப் புண்படுத்தி விட்டது. என்றாலும், பழி போகுமுன்னே உயிர் போக்கி மாண்ட மன்னனது செயல் ஒன்றே எனக்கு இப்போது ஆறுதல் அளிக்கிறது மதுரைக்