பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

தமிழ்ச் செல்வம்


கூலவாணிகன் சாத்தனார் கூறியதும் மலைவா ணர் கூறியதும் ஒப்புநோக்கினால், வேட்டுவச் செல்வி கண்ட பெண் கண்ணகித்தாய் என்றே

தோன்றுகிறது. இறந்தான் மன்னன் என்றதும் இறந்த கோப்பெருந்தேவியும் ஒரு பத்தினிப் பெண்ணே! வேண்மா! மலைவளங் கண்டு மகிழ்ந்தாயா? அல்லது சாத்தனார் கூறியதைக் கேட்டாயா? -

வேண்மா : முன்னதைக் கண்டுமகிழ்ந்த மனம் பின்ன

செங் :

தைக் கேட்டு வருந்தியது. அப்படியா! சரி; கோப்பெருந்தேவி, கண்ணகி இவ்விருவரில் சிறந்த கற்பரசி யார்?

வேண்மா இரண்டும் வெவ்வேறு துறைகள். கணவன்

மறைந்ததும் மறைந்தாள் கோப்பெருந்தேவி. கணவன் பழிபோக்கி மறைந்தாள் கண்ணகிதேவி. இருவரும் கற்பரசிகளே என்றாலும். நமது நாட்டைத் தேடி வந்தடைந்த கற்புத் தெய்வத் குற்குக் கோவில் கட்டி வைத்து, வணங்க வேண்டியதே நமது கடமையாகும். (ஒரு சேவகன் ஓடிவந்து)

சேவகன் : மன்னர் மன்னவா! வணக்கம்.

செங் : சேவ :

என்ன செய்தி! - இமயத்தில் புலிக்கொடியும் மீணக்கொடியும் பொறித்து வந்த சோழ பாண்டிய மன்னர்களின் வீரத்தை ஆரிய மன்னர்களாகிய கனகவிசயர்கள் இழித்துக் கூறினார்களாம். தங்கள் முன்னோர்கள் வலுவிழந்திருந்த காலத்தில் வந்து இதைச் செய்துவிட்டுப் போனார்கள் என்றும், இப்போது வந்தால் புறங்காட்டி ஒடவேண்டு மென்றும் பழி துாற்றினார்களாம். இச்செய் தியைச் சோழநாட்டிலிருந்து நமது ஒற்றர்கள் அறிந்து வந்து, இங்கு அறிவிக்கச் சொன் னார்கள்.