பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

தமிழ்ச் செல்வம்


சாத் : பாண்டியனது அரண்மனையில் கண்ணகி தோன்றிய காட்சியை ஒரு வெண்பாவில் அமைக்கும்படி இளங்கோவடிகளை வேண்டிக் கொள்வதுதான். செங் : தம்பி இளங்கோ! சாத்தனார் பாண்டிய நாட்டுப் பெரும் புலவர்களில் ஒருவர்; அவரது எண்ணத்தை நிறைவேற்ற வேண்டியது நமது

đ5 t-65) LD • இளங்கோ : அண்ணா! அப்படியே ஆகட்டும். கண்ண்கி தேவியின் வரலாற்றை ஒரு காவியமாக அமைக்க வேண்டுமென்பது எனது ஆசை. அதற்குச் சாத்தனார் உதவி பெரிதும் தேவை. அவர் குறிப் பிட்ட காட்சி அப்படியே என் உள்ளத்தில் பதிந் திருக்கிறது. கூறுகிறேன். கேளுங்கள். இளங்கோ : 1வெண்பா)

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையிற் தனிச்சிலம்பும் கண்ணிரும் சாத் : ஆகா!' - இளங்கோ : . . -வையைக்கோன்

- கண்டளவே தோற்றான் அக் காரிகைதன் - உண்டளவே தோற்றான் உயிர். (சொற்செவியில் சாத் : ஆகா! எங்கே, இன்னொரு முறை! *. (மறுபடியும் பாடுகிறார்.1 -

சாத் : என்ன நயம், என்ன நயம்! எவ்வளவு அருமை யான சொற்கள்! காட்சி அனைத்தும் கன்னித் தமிழாலே படம் பிடிக்கப் பெற்றுள்ளது. மிகவும் மகிழ்ச்சி அடிகளே! தாங்கள் அருள்கூர்ந்து இவ் வரலாற்றைக் காப்பியமாக்குங்கள் தங்கள் விருப்பம்போல நானும் உடன் இருப்பேன் சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் புகழைக் கல்லால் நிலைநாட்டட்டும். தாங்கள் சொல்லால் நிலை நாட்டுங்கள். வாழட்டும் கற்பரசியின் புகழ்! -