பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத் தொடக்கம்

13


இந் :

தமி :

கறிந்த ஆங்கிலப் பேரறிஞர் போப்பையர், தான் சாகும்போது தன்னுடை கல்லறைக் கல்லில் தமிழ் மாணவன்' என்று எழுதும்படி வேண்டி உயிர் துறந்திருக்கிறார். தமிழ் நமது தாய்மொழி என்ற பற்றினால் மட்டும் நான் அதை உயர்த்திப் பேச வில்லை. பிறமொழிகளுக்கு இல்லாத சிறப்பு, தமிழ்மொழி ஒன்றுக்கு மட்டுமே இருக்கிறது. நீங்கள் அதனை விரும்பிப் படிக்க வேண்டும், உங்கள் பிள்ளைகளுக்கும் தமிழின் மூலமே எல்லாக் கலைகளையும் போதிக்க வேண்டும். தமிழை ஊன்றிப் படித்தால் பண்பு வளரும்; ஒழுக்கம் உயரும்; அடக்கம் ஏற்படும்; அன்பு மலரும்... உடைகளை மாற்றிக் கொள்ளுங்கள்; கவலை யில்லை. உணவை மாற்றிக் கொள்ளுங்கள்; வருந்தவில்லை. உள்ளத்தை மட்டும் தூய தமிழ் உள்ளமாக வைத்துக் கொள்ளுங்கள். அன்பும் பண்பும், அடக்கமும் ஒழுக்கமும் உங்களிடம் இருக்க வேண்டுமானால், உள்ளத்தைப் பிற மொழிகளுக்கு அடிமைப்படுத்தி விடாதீர்கள்.

தமிழ் மக்களாகிய உங்களிடம், தமிழனாகிய நான் 'தமிழைப் படியுங்கள்' என்று, அதுவும் தமிழ்நாட்டிலேயே கூறிக்கொண்டிருப்பது, தமிழ்க் குலத்திற்கே ஒரு மானக்கேடு ஆகும்.

மத்த பாஷைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு தமிழுக்கு இருக்குதின்னு சொன்னிங்களே”...அது என்ன பாபு? f

ஒன்று என்ன: நான்கு சிறப்புக்கள் இருக்கின்றன. முதலாவது, இனிய மொழி, எளிய மொழி, சிறந்த மொழி. தனித்தமொழி, பழையமொழி, என்ற ஐந்து அடைமொழிகளுக்கும் தமிழ் ஒன்றே தகுதியுடையது எ ன் ப து. இரண்டாவது,