பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத் தொடக்கம்

15


தின்று அழித்தொழித்தன. எல்லாவற்றிற்கும் தப்பி, ஏணி ஏறி, பரணியின் மீது வைத்து, பழம் புலவர்களால் பாதுகாக்கப் பட்டு வந்த சில சுவடிகள்தான் மீதமாக இருந்தன. 'பழைய சுவடிகளை ஆடிப் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றிலே கொட்டினால் புண்ணியம்' என்ற ஒரு கொள்கை தமிழ் நாட்டில் பரவியது. இதனால், மிஞ்சியிருந்த சுவடிகள் யாவும் காவிரிக்கு இரையாகிப் போயின. இவ்வளவுக்கும் தப்பி, இப்போது நம்மிடையே இருப்பவை விரல்விட்டு எண்ணக் கூடியவையே. அவை :

பத்துப்பாட்டு; எட்டுத்தொகை; பதினெண் கீழ்க் கணக்கு என்பன. இவற்றுள்ளும். பத்துப்பாட்டில் முதற் பாட்டுக்கே ஐயப்பாடு தோன்றியிருக்கிறது. எட்டுத் தொகையில் புறநானூறு ஒன்று: அதில்,

முன்னடி யில்லாத பாட்டு இரண்டு; முடிவடி யில்லாத பாட்டு மூன்று; இடையடி யில்லாத பாட்டு காற்பது: அடியோடு இல்லாத பாட்டு இரண்டு.

மொத்தம் 51 நூறு என்றேயிருக்கிறது.

பதினெண் கீழ்க்கணக்கில் சில நூல்களின்

பெயர்கள் தானிருக்கின்றன. ஐ ம் .ெ ப ரு ங் காப்பியங்களில் ஐந்துக்கு இரண்டு, அடியோடு இல்லை. இசைநூல்களோ எதுவும் முழு உருவில் இல்லை. முத்தோள்ளாயிரம் முக்காற்பங்கு இல்லை. நாடக நூல்களோ அடியோடு இல்லை: இவ்வளவும் அழிந்து, இருக்கின்ற சில நூல்களைக் கூட, தங்களைப் போன்ற தமிழர்கள் படிப்பது மில்லையென்றால், தமிழ்தான் எப்படி வாழும்? தமிழர்கள்தாம் எப்படி வாழ்வார்கள்? இவர் களைச் சுமந்துநிற்கும் நாடுதான் எவ்வாறு