பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

தமிழ்ச் செல்வம்


வ: நகரத்தில் மட்டுமல்ல, பாண்டிய நாடு முழுவதும்

இl

ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு, இவ்வாறு பெருஞ் சோறு அளித்து, மக்கள் பசியறியாது பாதுகாத்து வருகிறோம்-பாண்டி நாடு முழுவதும் ஒருவர்கூடப் பசியாக இருப்பதில்லை. பசி பசியென்று ஒலமிடும் குரல் கேட்கக்கூடாது என்பது மன்னரின் கட்டளை.

அப்படியா...! (ஒரு புறம் கையைக் காட்டி) அதோ பாருங்கள். மருந்துச் சாலையின் உள்ளிருந்து, நோயுற்ற மக்கள் சாரிசாரியாய் வெளிவருவதை. இத்தகைய மருந்துச் சாலைகள் நாடு முழுவதும் வைக்கப் பட்டுள்ளன. திறமையான மருத்துவர்களின் கண்காணிப்பில் பாண்டி நாட்டில் பிணி வந்தடைவதில்லை என்றே கூறலாம். இனி ஆயுதச்சாலைக்குச் செல்லுவோமா?

ஆயுதச் சாலைக்கா...?

ஆம். பாண்டி நாட்டின் படைப் பெருக்கத்தையும் போர்க் கருவிகளின் திண்மையையும், வீரர்களின் வலிமையையும் உலகமே நன்கு அறியும். ஆதலின், பகையென்பதே நம் நாட்டைச் சேர்வதில்லை. வாருங்கள் பார்ப்போம்...

(செல்கின்றனர்)

காட்சி முடிவு

காட்சி : 3

அரசர் கொலுவிருக்கை

(மன்னர் முதலியோர் இருக்கின்றனர். வள்ளுவர்.அமைச்சர் வருகின்றனர்.1

!வரவேண்டும் ... வரவேண்டும் ... புலவர்பெரும : ما

பாண்டி நாடு முழுவதும் பார்த்தீர்களா?