பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடு

21


வ நகரத்தைப் பார்த்ததே போதும் என்று வந்துவிட் டேன்; நாடு முழுவதும் பார்க்க யான் விரும்ப வில்லை.

ம : மக்கள் பசியற்று வாழ, தெருவுக்குத்தெரு பெருஞ்

சோறு வழங்குவதைக் கண்டீர்களா?...

வ : கண்டேன்! பசி பசியென்று ஒலமிட்ட மக்கள், வயிறார உண்டு, மகிழ்ச்சியடைவதைக் கண்டேன்! பிணியினால் வருந்தும் பல்லாயிரவர் மருத்துவச் சாலைகளிலே மருந்துண்பதைக் கண்டேன்! உலகமே வியக்கும் படைக்கருவிகளுடன் நினது ஆயுதச் சாலைகளையும் கண்டேன்!

ம : தாங்கள் கூறியதுபோல், பசியும் பிணியும் பகையும் இல்லாத ஒரு நல்ல நாடு, நமது தென்பாண்டி நாடு என்பதில், இன்னும் ஐயம் உளதோ? மகிழ்ச்சி தானே!

வ : மன்னவா! அமைச்சரே! புலவர் பெருமக்களே! என்

  • கண்கள் இத்தனை நாளும் இவைகளைப் பாராது இருந்ததுபோல, இன்றும் பாராதிருந்திருக்கக் கூடாதா என்றே ஏங்கினேன்...

எல் : ஆ? என்ன?

வ : இத்தகைய காட்சிகளைக் காணவா நான் புறப்பட் டேன்? இந் நகரில் சோறு வழங்கும் இடத்தைப் பார்த்தபோதே திடுக்கிட்டேன்! அமைச்சர், நாடு முழுவதும் இவ்வாறே நடைபெறுகிறது என்றதும் நடுங்கிவிட்டேன். இது பாண்டி நாட்டிலே பசி யில்லை என்பதையா காட்டுகிறது? பசி, பசியென்று ஒலமிடும் பிச்சைக்காரர்களின் பெருக்கத்தையன்றோ காட்டுகிறது! தெருவுக்குத் தெரு மருந்துச்சாலைகள் என்றால், அது பிணியறியாது வாழும் மக்களின் நல் வாழ்வையா குறிக்கின்றது: எண்ணிப் பாருங்கள்.