பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

தமிழ்ச் செல்வம்


நோயாளிகளின் பெருக்கத்தையன்றோ காட்டு

கின்றது! அதுபோல ஆயுதச் சாலைகளும், படைப் பெருக்கமும், போர்க்கருவிகளின் திண்மையும் பார்க்கும்பொழுதே, இந் நாட்டிற்குப் பகைவர்கள் மிகுதியாக இருக்கின்றார்கள் என்பது புலப்பட வில்லையா? இத்தகைய காட்சிகளைக் கண்டு யான் எங்ங்னம் மசிழ்ச்சியடைய முடியும்? எனது உள்ளம் பெரிதும் வேதனைப்படுகிறது. இதுவா நல்ல நாடு? இல்லை...இல்லை!

பின், தங்கள் கருத்து!

உழைக்கும் மக்கள் பசியால் வாடும் நிலை காணப் பட்டால் அது ஊராள்வோனின் குற்றமல்லவா? நோய்கள் உண்டாவதற் கிடமில்லாத முறையில் மக்கள் உடல்நலம் பேணி வாழ்வதற்குரிய வழி வகுத்துக் கொடுக்காமல், மருத்துவச் சாலைகளை மட்டும் அதிகரிப்பதால் யாது பயன்? அன்பு வழியால் பகைைைரத் தன்வயப்படுத்தி, நட்பை வளர்த்து, போரை ஒழிக்க முயற்சிக்காமல் படைக்கருவிகளைப் பெருக்குவதால் என்ன பயன்?...ஆகவே சோறு வழங்காமல் பசியற்று வாழும் நாடாகவும், மருந்து கொடாமல் பிணியற்று வாழும் நாடாகவும், போரி டாமல் பகையற்று வாழும் நாடாகவும் உள்ள தென்பாண்டி நாட்டை யான் காண வேண்டும். சென்று வருகிறேன். யான் திரும்பி வரும்போது, இந்நாட்டை ஒரு நல்ல நாடாகக் காண்பேனாக! வாழ்க நின் கொற்றம்!

(செல்கிறார் வள்ளுவர்)

தெய்வப்புலமைத் திருவள்ளுவனார் வாழ்க...

காட்சி முடிவு