பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

தமிழ்ச் செல்வம்


சரி, உமக்கு விருப்பமில்லையென்றால் நான் மட்டும் நம்பிக்கை வைத்து என்ன பயன்?

(இருவரும் தயக்கத்துடன் புறப்படுகின்றனர்.1 பெரியோர்களே, ஆர்வத்தோடு வந்த நீங்கள் அமரக் கூட மனமில்லாமல் ஏதோ சஞ்சலப்படு கின்றீர்களே, ஏன்? (தயக்கத்துடன்) மன்னரைத்தான் நாடி வந்தோம். ஆனால்... ஆனால் என்ன? வந்த காரியத்தைச் சொல்லுங் களேன். சொல்லுவதற்கு மனமும் இல்லை; துணிவுமில்லை. மனமில்லாதவர்கள் வந்திருக்கவே வேண்டிய தில்லையே. என்னிடம் எதனையுங் கூசாமற் கூற லாம். துணிவை இழக்க வேண்டாம்.

(வந்தவர் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துத்

தயக்கத்துடன் விழிக்கின்றார்கள்.)

எங்கள் இரண்டு பேருக்கும் ஒரு வழக்கு ஏற்பட்

டுள்ளது. அதனைத் தீ ர் க் க வே வந்தோம். ஆனால்... வழக்கைச் சொல்ல மருட்சி ஏன்?

(இருவரும் மீண்டும் தயக்கப்படுகின்றனர் 1 அன்பர்களே. சொல்ல வேண்டியதை அஞ்சாமற் சொல்லுங்கள். மன்னனாயிற்றே என்று மருள வேண்டாம். அரசே, நாங்கள் ஊரைவிட்டுப் புறப்படுமுன் எங்கள் கற்பனையிலே காட்சியளித்த் மன்னர் வேறு; இன்று நாங்கள் காணும் மன்னர்வேறு. ஆண்டிலும் அனுபவத்திலும் முதிர்ந்த... ஒகோ!...சரி...சரி...உங்கள் தயக்கத்தின் காரணம் நன்றாக விளங்கிவிட்டது. வயதிற் சிறிய மன்னனால் வழக்குத் தீர்க்க முடியுமா?’ என்று

தானே கலங்குகிறீர்கள்?