பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்

25

(வந்தவர் இருவரும் ஒருவரையொருவர் நோக்கி அசட்டுச் சிரிப்பும், மன்னன் வாயினாலேயே தம் கருத்து விளக்கப் பட்டது குறித்து ஆறுதலும் காட்டுகின்றனர் -1 மன்னவா! மன்னிக்க வேண்டும். எங்கள் குறிப்பை எளிதில் புரிந்து கொண்டீர்கள். பெரியோர்களே! நீங்கள் நினைப்பது சரிதான். நமது அரண்மனை வழக்கு மன்றத்திலே ஒரு பெரியவர் இருக்கிறார். ஆண்டிலும் அனுபவத்தி லும் முதிர்ந்த அவரிடம் உங்கள் வழக்கைத் தெரிவிக்கலாம். நாளை வாருங்கள்.

(இருவரும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் செல்

கின்றனர்.)

காட்சி : 2

தெரு

முதல்வர் : நண்பரே, மன்னரைப் பார்த்தவுடன் உண்மை

யாகவே எனக்குத் திகைப்பு ஏற்பட்டுவிட்டது. இவ்வளவு இளைஞர் நமது வழக்கைப்பற்றி நன்றாகப் புரிந்துகொள்ளவே மு டி யா தே; அப்புறம் எப்படி நியாயம் வழங்குவாரென்று நாம் துணிந்துசொல்லியது நல்லதாகப் போய் விட்டது இல்லையா?

இரண்டாமவர் : சந்தேகமென்ன? நாற்பது வயதானால்

(9)

நல்ல குணம் என்பதே பழமொழியாச்சே! இளமைக்கு எப்போதும் துடிப்பு அதிகமல்லவா? எது சரி? எது தவறு? என்று நன்கு ஆராய்ந்து முடிவு செய்ய இளமை உணர்ச்சி இடமளிப்ப தில்லையே. அதனால் தான் நானும் யோசித்தேன். நம்முடைய எண்ணத்தை அறிந்த பின்னும், மன்னர் சிறிதும் வருந்தியதாகத் தோன்றவில்லை பார்த்தீரா?