பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

தமிழ்ச் செல்வம்


இ : அதுதானே மன்னருக்கும் மற்றவருக்கும் உள்ள வேறுபாடு ஆஹா புன்னகை அப்படியே அவரது முகத்தில் விளையாடியதே! மு : இளைஞராயிருந்தாலும் அறிவுத்திறன் அபாரம். நமது எண்ணத்தை எவ்வளவு எளிதாகப் புரிந்து கொண்டார்! நாளை நீதிமன்றத்திற்கு அவரும் வரக் கூடுமென்று நினைக்கிறேன், வாரும், வாரும்.

காட்சி : 3 வழக்கு மன்றம் (முதியவர் உடையில் மன்னர் இருக்கின்றார். வழக்குடைய இருவரும் மன்றத்திற்கு வந்து மூதறிஞரை வணங்குகின்றனர். அறிஞருக்கு அருகில் அமைச்சர் அமர்ந்திருக்கின்றார்.) அமைச்சர் : வாருங்கள். பெரியோர்களே! எங்கு வந்

தீர்கள்? ஒருவர் : வழக்குரைக்க வந்தோம். மன்னர் ... மூதறிஞர் : ஒகோ! நேற்று அரசர் குறிப்பிட்ட பெரியவர்

கள் நீங்கள் தாமோ? இருவரும் : ஆமாம். ஆமாம்.

அ ! உங்களில் வழக்காடுபவர் யார்? எதிர்ப்பவர் யார்? ஒ : நான்தான் வழக்குத் தொடுப்பவன்; இவர் எதிர்ப்

பவர்.

அ : புதுமையாயிருக்கிறதே! இருவரும் சேர்ந்தே வந்திருக்கிறீர்களே? சாட்சி கூறுவது யார்? மற்றவர் : எனக்கு அவர் சாட்சி; அவருக்கு நான் சாட்சி. தனியே ஒரு_சாட்சி இவ்வழக்கிற்குத் தேவை யில்லை என்றே கருதுகிறோம். - elp சரி, உங்கள் வழக்கைக் கூறுங்கள். மு : நான் இவரிடம் சென்ற ஆண்டில் ஒரு நிலம் வாங் கினேன். அதில் வீடு கட்டுவதற்காகப் பள்ளம்