பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்

27


தோண்டினேன். ஒரு புதையல் தென்பட்டது. நிறையப் பொன் கட்டிகள், புதையல் யாருக்குச்

சொந்தம்? -

அ : ஆமாம், நீர் என்ன சொல்கிறீர்? மு : (மற்றவரைக் காண்பித்து) அவர் நிலத்தில் கிடைத்த தால், புதையல் அவருக்குத்தான் சொந்தம் என் கிறேன் நான். ம நண்பர் சொல்வது வேடிக்கையாகவே இருக்கிறது. நான்தான் நிலத்தை விற்றுவிட்டேனே! புதையலில் எனக்கு ஏது உரிமை? மூ ! உங்கள் வழக்கு உண்மையிலேயே வேடிக்கையாகத் தான் இருக்கிறது. சில நாடுகளிலெல்லாம் அடுத்த வன் பொருளை அபகரிக்கும் ஆட்களே ஏராளம். இங்கோ தங்கப் புதையலைக்கூட எனக்கு வேண்டாம், எனக்கு உரியதல்ல என்று வழக்காடு கின்றீர்கள். உங்களைப் போன்ற குடிமக்களைப் பெற்ற சோழ மன்னனின் பெருமைய்ே பெரும்ை! மு நீங்களே சொல்லுங்கள் ஐயா! அவர் நிலத்தை மட்டுந்தானே விற்றார்? புதையலுக்கு நான் எப்படி உரிமை கொண்டாட முடியும்? ம : விற்றது நிலந்தான். ஆனாலும் அதில் உள்ள மண், கல், நீர், மரம், செடி முதலிய யாவும் சேர்ந்த ஒன்று தானே நிலம்: விற்ற நிலத்தில் இருந்த புதையலை நான் எப்படித் திரும்ப ஏற்றுக் கொள்வேன்? மு : அவர் நிலம் விற்றாரே தவிர, புதையலை விற்க

வில்லை. ம : மாடு விற்றால் கன்றும் சேர்ந்ததுதானே? மரம்

விற்றால் கனியும் சேர்ந்ததுதானே? மு , மாறி வாங்கும் போது கன்றையும் பார்க்கிறோம். மரம் வாங்கும்போது பழமும் காணப்படுகிறது. ஆகவே, அவை வாங்கியவரையே சேரும். நிலம்