பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

தமிழ்ச் செல்வம்


اولیه

தமிழ்ச் செல்வம்

வாங்கும்போது புதையல் காணப்படவில்லையேஅது எப்படி என்னைச் சேரும்?

அவர் வழக்கு நியாயமல்ல். மரம் விற்றால் அதன். அடிவேர் யாருக்குச் சொந்தம்? மரம் வாங்கும் போது வேர் கண்ணுக்குத் தெரிகின்றதா?

மரத்தின் அடிவேர் உண்டு என்பது கண்ணாற் காண முடியாவிட்டாலும் கருத்தால் அறியக் கூடியது தானே? நிலம் வாங்கும்போது அதில் புதையல் இருக்கு மென்று எப்படிக் கருத முடியும்?

இதெல்லாம் வீண் வாதம், புதையல் எனக்கு உரிய தல்ல,

அறிஞர் பெரும! நான் கொடுத்த விலைக்கும் அகப் பட்ட பொருளுக்கும்கொஞ்சமும் பொருத்தமில்லை. விற்ற நண்பர் புதையல் இருப்பது தெரிந்திருந்தால் இவ்வளவு குறைந்தவிலைக்கு விற்றிருக்கமாட்டார்; நானும் இவ்வளவு குறைந்த விலைக்கு வாங்கியிருக்க மாட்டேன். இன்னொருவர் பொருளை விலையின் றிப் பெற என் மனம் இடங்கொடுக்காது. ஆகவே, புதையலை அவர் ஏற்றுக்கொள்ளுமாறு செய்ய வேண்டுகிறேன்.

மனமார விலைக்கு விற்றுவிட்ட ஒரு பொருளைத் திரும்பப்பெற ஒருக்காலும் என் மனம் இசையாது. புதையலை அவரே வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வளவுதானே உங்கள் வழக்கு? (மூதறிஞரை நோக்கி) அறிஞர் பெரும! இவர்கள் இருவர் கூறுவதும் உண்மைதான். புதையல் இருவருக்கும் சொந்தமல்ல. அது நாடு ஆளும் மன்னனுக்கே உரியது. அவ்வாறே தீர்ப்பளிக்க வேண்டுகிறேன்.

நன்று நன்று, உம் கருத்து. இரண்டு பேரும் உரிமை பற்றி வழக்காடும்போது, புதையலை மன்னனுக்குச்