பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

தமிழ்ச் செல்வம்


மூ : பெரியோர்களே. நீங்கள் நினைக்கிறபடி நான் ஆண்டிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவனல்ல. உங்களைப் போன்ற பண்புள்ள மக்களைப் பெற்ற நாட்டை ஆளும் நற்பேறு பெற்ற ஒரு சிறியோனே

நான்.

Iதாடி மீசை முதலியற்றைக் கழற்றிவிட்டுப்

புன்னகை பூக்கிறான் )

இரு : என்ன, நம் மன்னரா: அரசே, மன்னிக்க

வேண்டும். தங்கள் பருவத்தையும் உருவத்தையும் கண்டு ஐயங்கொண்ட எங்களுக்கு நல்ல வழிகாட்டி

iைர்கள். மு : மன்னர் கரிகாலர் வாழ்க! வாழ்க!

- காட்சி மாற்றம் காட்சி 4

(சோழ மன்னரின் அரண்மனையிலிருந்து தங்கள் இருப்பிடம் வந்துகொண்டிருந்த இருவரும் தங்கள் மக்னும் மகளும் உரையாடிக் கொண் டிருப்பதைப் பார்க்கின்றனர்.) ஒருவர் : (இருவரில் ஒருவர்) அன்பரே! என்ன இது? மன்னரின் முடிவுக்கும் நமது முடிவுக்கும் முன்னே நமது மக்களின் முடிவு...? மற்றவர் : இரும்...இரும்...அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியலாம். - (தம் மக்கள் பேசுவதைக் கேட்கின்றனர்.1 கன்னி : தமது எண்ணம் நிறைவேறத் தடையாக

இருப்பது ஒன்று உண்டு. காளை : என்ன அது? க : தமிழ்! . கா : நான் நம்பவில்லை. தமிழ் ஒருபோதும் நம்

காதலைத் தடைசெய்துவிடாது.