பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

தமிழ்ச் செல்வம்



ஒகோ! இப்போ, இந்தக் குறள் வந்து, துறவற இயல்லே சொல்லியிருக்கு அப்போ,

கொல்லான் புல்ாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் அப்படின்னு உம்மைப்போல என்னைப் போல சாதாரண மக்களுக்கா சொல்லி இருக்கு? அப்போ, தேவர்களுக்காகச் சொல்லியிருக்கோ? பார்த்தீரா? இதானே வேண்டாங்கறது! முற்றும் துறந்த முனியுங்கவர்களுக்கையா ... சன்யாசி

களுக்கு, துறவிகளுக்கு.

அப்படியா?

பின்னே! நேற்று நம்ம மடத்திலே மெய்ஞ்ஞான பண்டிதர் இதே குறளுக்கு விளக்கம் சொன்னாரு என்ன அழகாயிருந்தது தெரியுமா? யாரு? மெய்ஞ்ஞான பண்டிதனா? என்ன சொன் னான்? : १ புலால் மறுத்தல் இங்கிறது, துறவற இயல்லே, வந்தாக்கூட, எல்லாருக்கும் பொதுவான நீதி:

எல்லாரும் அதைப் பின்பற்றணும் அப்படி ன்னு

சொன்னாரு.

ஊம்.அப்புறம்: அதுமட்டுமில்லைங்க, அதுக்கு ஒர் உதாரணமும் சொன்னாரு ஜனங்கள்ளாம் அப்படியே அசந் து போயிட்டாங்க. கல்வியைப்பற்றி அரசியல்லே தானேசொல்லியிருக்கு? அதனாலே துறவிகள்ளாம் முட்டாளாயிருக்கணும்னு அர்த்தமா? அப் படீன்னு கேட்டாரு. எனக்கும் அது நியாயமாத்

தான் பட்டுது.