பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல்

51


தோ:

51

சொன்னாரே, என் தலைவர், அவர் சொன்னபடி வரவில்லையே என்று, என்னைப் பார்த்துச் சிரிக்கிறதடி. ஆமாம்; நான்தான் கேட்கிறேன், ஏனம்மா இன்னும் அவர் வரவில்லை? நல்ல கேள்வியடி இது? நானும் அதைப்பற்றித் தானே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஒன்றும் புரியவில்லையே. அவர் சொல்லிச் சென்ற கெடுவும் தாண்டி விட்டதே? ஒரு வேளை, சொன்ன வார்த்தையை மறந்துவிட்டாரோ, என்னவோ? போடிபோ...கண்டபடி உளறாதே...மறப்பதா வது? என் கண்ணாளர், என்றைக்கும் சொன்ன சொல் தவறவே மாட்டாரே! அப்படியானால், போன இடத்தில் அவருக்கு ஏதாவது துன்பம் ...? ஊம். அவருக்கா? எந்தத் துன்பம் வந்தாலும், ஒரு சிரிப்பினால் அதை மறந்துவிடும் தீரரடி அவர். சரி. அப்போ, துன்பங்கள் எதுவும் அவர் வரவைத் தடை செய்ய முடியாது. பின் ஏன் வரவில்லை? அதுதானே தெரியவில்லை! ஏனம்மா, ஒருவேளை, வரும் வழியில் அடர்ந்த காடு இருக்கிறதே, ஏதேனும் கொடிய விலங்கு களின் ...... . - போதும் நிறுத்தடி ஏதேதோ சொல்லி மனத்தைக் குழப்பாதே. என் தலைவர் கோழையல்லடி, கோழையல்ல. அவருடைய சீற்றத்தைக் கண்டால், சிங்கமும் புலியும் கூடத் திணறி ஒடுமடி. அம்மா அம்மா! இப்பொழுதுதான் எனக்கு

உண்மையான காரணம் புரிகிறது.