பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

தமிழ்ச் செல்வம்

தோ :

தமிழ்ச் செல்வம்

உங்களிடத்தில் சொன்ன சொல்லை அவர் மறந்து

விடவும் இல்லை; வரும் வழியில் அவருக்கு எந்த விதமான துன்பமும் ஏற்படவில்லை. காரணம் இதுதான்.

எது? கலிங்கத்தில் கண்ணைக் கவரும் அழகியர் பலர் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் களில் யாராவது ஒரு வேல்விழியாளிடம் தஞ்சம் புகுந்திருப்பார். வாயை மூடடி வம்புக்காரி! என் உள்ளத்தைக் கலைக்கப் பார்க்கிறாயோ? சிந்தையாலும் பிற மாதரைத் தொடாத என் காதலரைப் பற்றியா, இப்படிப் பேசுகிறாய்?

அதுவும் இல்லையானால், இவர் இன்னும் வராத தற்கு என்னதான் காரணம் சொல்ல முடியும்? எனக் கென்னவோ நம்பிக்கை இல்லையம்மா! ஏண்டி, கலிங்க மன்னரின் அரண்மனையில் தமிழ்ச் சுவடிகள் ஏதும் இருக்குமோ? சுவடிகளுக்கென்னம்மா குறைவு? ஒரு பெரிய

தமிழ்க்களஞ்சியமே அங்கு இருக்கிறதாமே!

அப்படியா? ஊம்.

ஐயையோ! இப்போதுதானடி புரிகிறது. என்

காதலர் இன்னும் வராத காரணம். அவர் தமிழ்ச்

சுவடிகளிலே புகுந்துவிட்டால், என்னை மட்டு மென்ன, உலகத்தையே மறந்துவிடுவாரே! என் இன்னுயிர்த் தலைவர், தமிழ்க் காதலில் இறங்கி விட்டீர்களா? மீண்டு வர, இனி எத்தனை நாட்கள் ஆகுமோ? ஐயோ! நான் என்ன செய்வேன்?