பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல்

55


தெரியும், தெரியும், பேச்சிலேயே ஆளை மயக்கப் பார்க்கிறீர்களே!

(தலைவன் உண்மையிலேயே தும்மலை அடக்க

முயலுகிறான்.) பார்த்தீர்களா! பார் த் தி ர் க ளா! எந்தப் பெண்ணோ நினைக்கிறாள். அதனால்தான்

அடிக்கடி உங்களுக்குத் தும்மல் வருகிறது. நீங்கள் வேண்டுமென்றே அதை அடக்குகிறீர்கள்அப்படித்தானே? (அழுகிறாள்!

தலைவன் சரிதான், தும்மினாலும் குற்றம், தும்மலை

தி

அடக்கினாலும் குற்றமா? முதலில் உன்னைப் பேசவைக்க வேண்டுமென்றுதான் பொய்யாகத் தும்மினேன். இப்பொழுது உண்மையாகவே தும்மல் வந்துவிட்டது. நீ வேறுவிதமாக எண்ணுகிறாயே என்று அடக்கினேன், நான் என்னதான் செய்யட்டும்?

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது,

தலைவன் : ஆருயிரே! என்மீது வீணாகக் குற்றம் சொல்

லாதே. நான் எந்தப் பெண்ணையும் கண்ணெடுத் தும் பார்த்ததில்லை. கலிங்கத்தில் இருந்தபோ தெல்லாம் உன் நினைவுதான். பிரிந்தது முதல் இதுவரை உன்னையே நினைத்துக்கொண்டு ஓடி வந்திருக்கிறேன் கண்ணே!

என்ன? என்னை நினைத்துக்கொண்டு வந்தீர் களா? (மீண்டும் அழுகிறாள்) -

தலைவன் : என்ன இது? மீண்டும் அழுகிறாய்?

த'

என்னை நினைத்தேன் என்றால் என்ன பொருள்?

தலைவன் : ஏன்? அதில் என்ன தவறு?

நினைவு என்பது எப்பொழுது வரும்? மறந்த பிறகு தானே? நீங்கள் என்னை மறந்து விடுவீர்கள். அப்புறம் திடீர் திடீரென்று நினைப்பு