பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

தமிழ்ச் செல்வம்


வரும் - அப்படித்தானே? என்னை மறக்காமல் இருந்தால், நினைப்புக்கே இடமில்லையே. என்னை மறந்த சமயத்தில் யாரை நினைத்தீர் களோ? என்னென்ன செய்தீர்களோ?

தலைவன் : அடி அன்னமே, உன்னை மறப்பதா? அது என் உயிரையே மறப்பது போலல்லவா? உலகில் உன்னையே நான் அதிகமாக நேசிக்கிறேன் என்பது உனக்குத் தெரியாதா? த : உன்னையே அதிகமாக நேசிக்கிறேன் என்றால், கொஞ்சமாக நேசிப்பது யாரையோ? அவர்கள் எத்தனை பேரோ? எங்கிருக்கிறார்களோ?

(அழுகிறாள்) தலைவன் : தங்கமே இப்படிக் குற்றம் கண்டுபிடித்தால், நான் என்ன செய்வது? என் உள்ளத்தில் உன் ஒருத்திக்குத்தானே இடமுண்டு இந்த உடலிலே உயிர் இருக்கும் வரையும், இந்தப் பிறவியில் நான் உன்னைக் கைவிடவே மாட்டேன்-இது உறுதி நம்பு. த : கண்ணாளா, நான் என்ன குற்றம் செய்தேன்?

தலைவன் : குற்றமா? ஏன்? ஏன் இப்படித் தேம்பித் தேம்பி அழுகிறாய்? சொல்லு கண்ணே! என் கண்ணல்ல!

த : இந்தப் பிறவியில் என்னைக் கைவிடுவதில்லை யென்று சொன்னிர்களே! அப்படியானால், அடுத்த

பிறவியில் யாரை அடையத் தவம் செய்கிறீர் களோ ?

தலைவன் : அடாடாடா! வார்த்தைகளைப் பன்னிப் பன்னி, என்னைத் திணற அடித்து விடுகிறாயே. எப்படிச் சொன்னாலும், தவறாகப் பொருள் கொண்டுவிட்டால் நான் என்ன செய்ய முடியும்;