பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல்

57


இதோ பார், இந்தப் பிறவி மட்டுமல்ல, ஏழேழு பிறவியிலும்... . த : என்ன? தலைவன் : இல்லையில்லை. ஏழேழு பிறவி மட்டுமல்ல! எத்தனை பிறவி யெடுத்தாலும் உன்னைக் கைவிட மாட்டேன். சரிதானா - இப்போது மகிழ்ச்சி தானே! எங்கே கொஞ்சம் சிரி. த ஊஹாம். தலைவன் : அதோ, அத்தக் கனி இதழ்களில் சிரிப்பு.

எட்டிப் பார்க்கிறதே! த ஊஹாம். தலைவன் : எங்கே, சிரி, சிரி! (சிரிக்கிறாள்) சிரிப்பே ஒடிவா, ஒடிவா, இதோ, அதோ வந்துவிட்டது.

(கலகலவென்று நகைக்கிறாள்.) தலைவன் : ஆஹா! - - த சரி, நேரமாய்விட்டது. வாருங்கள் உணவருந்தப்

போகலாம். - தலைவன் : நல்ல வேளை உணவு என்றதும், எனக்கு

ஒரு அருமையான நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. அதை உன்னிடம் சொல்லவேண்டுமென்று ஆவலாக வந்தேன். த : அப்படியென்ன அதிசயமான நிகழ்ச்சி? தலைவன் : ஆமாம். அதிசயமானதுதான் - இரண்டு நாட்களுக்குமுன், கடும்பகலில் காட்டு வழியே வந்து கொண்டுருந்தேன் - நாக்கு வறண்டு போயிற்று. எங்கேயாவது தண்ணிர் கிடைக்காதா வென்று ஏங்கிக் கொண்டே வந்தேன். நல்ல வேளையாக ஒர் இடத்தில் ஒரு சிறிய சுனை தென்பட்டது. என்ன தென்பட்டது? த சுனை.அப்புறம்: ... -