பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

தமிழ்ச் செல்வம்


தலைவன் : அதில், தரையோ டு தரையாய்க் கொஞ்சம் தண்ணிர் இருந்தது. மகிழ்வுடன் சென்று நீர் அருந்தினேன் மிகுதியிருந்த தண்ணின்ர என் குதிரையும் மண்டிக் குடித்தது. மிச்சமிருந்த தண்ணiர் மிகவும் கொஞ்சம். தண்ணிர் குடித்தபின் ஒரு மரத்தடியில் களைப்பாறிக் கொண்டிருந்தேன்.

த : கடும்பகலில் வறண்ட பாலையில், எவ்வளவு

களைப்பாயிருக்கும்!... அப்புறம்!

தலைவன் : களைப்பாறிக் கொண்டிருந்தேனா? அப் போது இரண்டு மான்கள் நீர் வேட்கையால் விரைந்து ஒடி வந்தன; சுனையருகில் சென்றன. சுனையிலிருந்த நீர் ஒரு மானுக்குத்தான் போதும் போல் தோன்றிற்று. எனவே, ஆண்மான் சற்றுத் தொலைவிலேயே நின்றுகொண்டது. பெண்மான் நீர் குடிக்க வேண்டும் என்பதில் ஆண்மானுக்கு மிகுந்த ஆசை. பிறகு பெண்மான் நீரண்டை சென்றது. எந்தமான்?

த : பெண் மான்?

தலைவன் : சென்றதா? ஆண்மான் நீர் அருந்த வேண்டு மேயென்ற எண்ணத்தால், பெண் மான் பின் வாங்கிக் கொண்டது. ஆண் மான் கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்து நீர் அருந்தச் சென்றது. அதைக் கண்டு, பெண்மானும் நீரண்டை சென்றது. ஆண் மான், தண்ணிரில் வாயை வைத்து, நீர் அருந்துவது போல் பாசாங்கு செய்து, தண்ணிர் முழுவதையும் பெண்மானே குடிக்கும்படி செய்தது. இதையெல்லாம் நான் குறிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தேன். ஆ எண் மா னி ன் அன்பைப் பார்த்தாயா? பெண்மையைப் பேணுவ தில் கானகத்து விலங்குகளுக்கும் எவ்வளவு ஆசை பார்த்தாயா?