பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

தமிழ்ச் செல்வம்


தலைவன் என் கண்மணி, நீ வெற்றி பெற்றாலென்ன,

நான் வெற்றி பெற்றலென்ன? இரண்டும் ஒன்று தான்.

[இருவரும் சிரிக்கின்றனர்.1

த : மிகவும் களைத்திருக்கிறீர்களே உட்காருங்கள்.

முதலில், பாலும் பழமும் கொண்டு வருகிறேன்.

தலைவன் : வேண்டாம் கண்ணே! பழமும் வேண்டாம்.

பாலும் வேண்டாம்.

அன்றிலடி காமிருவர். பழமும் பாலும் யாருக்கு வேண்டுமடி, என்ற னாசைக் குன்றத்தில் படர்ந்த மலர்க் கொடியே! மண்ணில் குவிந்திருக்கும் சுவையுள்ள பொருட்க

(ளெல்லாம் ஒன்றொன்று மறுகாளே பழமை கொள்ளும், ஒன்றொன்றும் சிலாாளில் தெவிட்டிப் போகும், அன்றன்று புதுமையடி தெவிட்ட லுண்டோ. ஆருயிரே! நீ கொடுக்கும் இன்பம் தானே!

தலைவன் : அன்பே ஆசைக் கிளியே - நான்

அமுதம் கேட்டேன் வா வா! (அன்பே)

த : அமுதமா! அமுதமா!

கனிவாய்ச் சொல்வீர் கண்ணாளன - ர்ே

கருதும் அமுதம் எதுவோ (அன்பே)

தலைவன் : கின் கனிவாய் அமுதம் தானே!

என்காதல் பேணும் தேனே! "பாலொடு தேன்கலங் தற்றே பணிமொழி வாலெயி றுறிய கீர்’ எனச் சாலப் பொருத்தமா வள்ளுவள் இனிய தமிழிற் சொன்னது போலவே (கின்கணி).