பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

தமிழ்ச் செல்வம்


புலவர் : என்னடி இது? பெருந்துன்பமா யிருக்கிறது. உணவுதான் வயிற்றுக்கு இல்லை; உறங்கவாவது கூடாதா? எப்பொழுது பார்த்தாலும் குழந்தையை அழவிட்டுக் கொண்டேயிருக்கிறாயே? பசியால் அழுங் குழந்தை உன் இசையைக் கேட்டால் சிரித்து

விடுமா? ம : என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?

பு : அழுகிற பிள்ளைக்குப் பாலைக் கொடுக்கவேண்டும். இது கூட நான் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா?

ம : பால் கொடுக்காமலா இருக்கிறேன்? கொடுத்துத் தான் பார்க்கிறேன்; குழந்தையும் சுவைத்துத்தான் பார்க்கிறது. ஆனால்...வீட்டிலே அ டு ப் பு நெருப்பைக் கண்டு ஆறு நாள் ஆகிறது. அரை வயிறு உணவு உண்டு ஐந்து நாள் ஆகிறது. பிள்ளைக்குப் பால் எப்படி இருக்கும்? பு : மெய்தான்; மெய்தான். கொண்ட மனைவியையும் குழந்தையையும் பசி நோயிலிருந்து காப்பாற்ற வழி தெரியாமல் திண்டாடுகிறேன். நான் என்ன செய்வேன்?

ம : என்ன செய்வேன், என்ன செய்வேன் என்று சொல் விக்கொண்டு இருந்தால், உலையிலே அரிசி முளைத்து விடுமா? எவரிடமாவது சென்று, எதை யாவது பாடி, ஏதாவது பரிசு பெற்றுவரக் கூடாதா? ஏதாவது பெற்று வந்தால் தானே, அடுப்பைப் பற்றவைக்க முடியும். பு : எங்கே போய்ப் பெற்று வருவது? போகாமலா இருக்கிறேன்? வஞ்சகம் பேசும் மக்களிடம் நடந்து நடந்து என் கால்களெல்லாம் புண்ணாகிவிட்டன. செல்வர் வீட்டு வாசல்தோறும் சென்று முட்டி முட்டி, என் தலையெல்லாம் புண்ணாகிவிட்டது.