பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடை

65


ւ! : இ :

.

குமணனா? யார்? எங்கே?...

ஐயோ பாவம்.புலவரே நீர்பெரிய தவறு செய்து விட்டீர் வள்ளல்.குமணனைக் காணாமல், வறுமை வறுமை என்றால், குற்றம் உம்முடையதே. நான் கேள்விப்பட்டதே யில்லை.

இங்கிருந்து பத்து காத தாரத்தில், கிழக்கே ஒரு பட்டினம். அதை யாளும் மன்னர் மன்னனே குமணன்.

அப்படியா?

நான் அவரிடம் சென்றுதான் .ஊர் திரும்புகிறேன். அந்த வள்ளல் தந்த பரிசுகள்தான் இவை. செல்லும் வழியில், தங்களைப் பார்த்துப்போகவே இங்கு இறங்கினேன் இதோ எனது அன்புக் காணிக்கையாக, இந்தச் சிறு தொகையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இல்லை இல்லை, வேண்டாம்

கண்டிப்பாய் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மறுக்கக் கூடாது. (பொருள் கொடுக்கிறார்) உடனே குமணனைச் சென்று பாருங்கள். தங்கள் குறையெல்லாம் தீரும். நான் போய் வரட்டுமா?

போய்வாருங்கள். மிக்க நன்றி -

(பல்லக்குப் போகிறது) பொன்னி! இந்தா, இதை வைத்துக்கொள். நான் குமண வள்ளலிடம் சென்றுபரிசில் பெற்று. விரை வில் திரும்புகிறேன். குழந்தையை நன்றாகப்

பார்த்துக்கொள். போய், வரட்டுமா?

உடனே புறப்ப்ட வேண்டும்ாக்கும்? இரண்டு நாள் இருந்து, வயிறர்ர உண்டு, உடல் நலம் பேணி,

அதன் பிறகு செல்லக் கூடாதா?

த.-5