பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடை

67


ஆஹா என்ன வள்ளற்றன்மை! அதற்காக என்ன நடந்தது?

மு-கா அவருடைய தம்பி இளைய குமணர். அண்ண

னிடம் எல்வளவோ சொல்லிப் பார்த்தார்; கேட்க வில்லை. படைத் தலைவர்களுடன் சதியாலோசனை செய்து, அண்ணனைக் கொன்று விட்டு, நாட்டை அபகரிக்க எண்ணினார். இதைக் கேள்விப்பட்டார் குமண மன்னர். "சதி செய்ய வேண்டாம் தம்பி; எல்லாவற்றையும் நீயே ஒப்புக்கொள்; எனக்குக் காடே போதும்? என்று சென்று விட்டார்.

(துடித்து) ஐயோ! அப்படிப்பட்ட மன்னனுக்கு, இப்படிப்பட்ட ஒரு தம்பியா? என்ன கொடுமை! இளையவரைப் பார்ப்பதால் எனக்கென்ன பயன்? பாராமற் செல்வதே சாலச் சிறந்தது. ஆம்; அந்த வள்ளலைக் காணவேண்டும் கா ட் டி ற் கு ச் சென்றேனும், அந்தச் காவலனைக் கண்ணாற்

காணவேண்டும்.

காட்சி : 3

காடு

(குமணன் பாடிக்கொண்டிருக்கிறான்.

குமணன்

இன்ப கடம் புரிந்திடும் மாஎழில் மேவும்

இயற்கை தனைக் காண-உள்ளத்தில் (இன்ப) அன்பு தவழ் சோலை அழகினிலே என்றும் அறியா அமைதி நிலவு முள்ளம் தன்னில் (இன்ப) மாங்குயில் கூவிடும் தீங்குரலால் இசைக்கும் மணமலர்த் தேனுண்டு மதுகரமே (இன்ப) மான்களோடு கிள்ளை மழலை மொழி பேசி

(இன்ப)

மகிழும் அழகின் நிலை கண்டுள்ளம் தன்னில்