பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரம்

73


சேரன் சிறந்த அறிவாளி. போர் நேராமல் தடுக்கவே முயற்சித்திருப்பான். நமது சோழ மன்னரும் நேர்மை தவறாதவர். எப்படியோ, இவர்களுக்குள் பேச்சு முறிந்து போர் மூண்டு விட்டது. நாம் என்ன செய்ய முடியும்? போர்! இப்போதுதானே போர் நடந்து முடிந்தது! மறுபடியுமா? போர்? ஆமப்பா, ஆமாம். சேரனுக்கு வரவரப் பேராசை பெருகிவிட்டது. அந்தப் பேராசைதான் பெரும் படையைத் திரட்டச் செய்து விட்டது. படைக் கருவிகளும் பெருகிவிட்டன. அடுத்து நடக்க வேண்டியது போர் தானே? முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். வைரத்தை வைரத்தால்தான் அறுக்க வேண்டும். வெறியைப் போரிட்டே ஒழிக்க வேண்டும் சோழ வீரர்கள் கோழைகளல்லர். ஆமாம்; வலியச் சண்டைக்குப் போகக்கூடாது; வந்த சண்டையை விடக்கூடாது. ஒழியட்டும் சேரமன்னரின் போர் வெறி

எல்லோரும் : உயரட்டும் புலிக்கொடி! கிளம்பட்டும்

சோழர் படை: (சோழனின் போர்ப்பறை முழக்கம்.)

பறை அறிவிப்போன் : வாழப் பிறந்த சோழ மக்களே,

சேரமன்னன் இந்நாட்டின் மீது படையெடுத்து விட்டான். வேற்று மன்னனின் வெறியை முறிக்க வீட்டுக்கு ஒரு ஆள் தேவை. போர்க் கருவி களுடன் புறப்படுங்கள். வீட்டுக்கொரு ஆண்மகன் நாட்டைக் காக்கப் புறப்படுக! இது சோழ மன்னரின் கட்டளை! -

எல்லோரும் : போர்! போர் உயரட்டும். புலிக்கொடி.

(பறை முழக்கம்]