பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

தமிழ்ச் செல்வம்


வாடா என் கண்ணே! நானும் வருகிறேன் அப்பா! கண்னே! நான் போர் முனைக்குச் செல்கிறேன்; அம்மாவோடு விளையாடிக்கொண்டிரு.

(முத்தம் கொடுக்கிறான்.)

காட்சி : 4

தெரு (இரண்டாம் நாள் போர் முடிந்து, படைவீரர் திரும்புகின்றனர்.) என்னப்பா கையிலே? ஒன்றுமில்லை; ஒரு சிறு காயம். எங்கே அட பாவி படுகாயமல்லவா ஏற்பட் டிருக்கிறது. அதுவும் வலது கையில் த்சு த்சு... வெட்டியவனை அந்த இடத்திலேயே பழி வாங்கி விட்டேன். இருந்தாலும், நாளைப் போரில் கையில் வாளேந்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே என்று தான் கவலையாய் இருக்கிறது. (தனக்குள்) எங்கே என் கணவர்? இன்னும் வர வில்லையே? அண்ணா, அவர் வரவில்லையா? உன் கணவரா அம்மா? ஆமண்ணா. அம்மா! அவர் இன்று போரிட்ட வீரத்தை நினைத்தாலே புல்லரிக்கிறது. அவர் யானைப் படைகளுக்குள்ளே புகுந்து, பல யானைகளின் கால்களையும், துதிக்கைகளையும் வெட்டி

வீழ்த்தினார். ஆனால் இறுதியில், அவரையும், எதிரியின் வாள் வெட்டி வீழ்த்தி விட்டதம்மா!