பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரம்

79



ஐயோ! என் அன்பே நான் என்ன செய்வேன்?

{மூர்ச்சிக்கிறாள்! விடியுமட்டும் அதே நினைவால் வருந்துகிறாள். கோழி கூவுகிறது. தோழி செங்கமலம் தேற்றுகிறாள்.)

அழாதேயம்மா! நாம் கொடுத்து வைத்தது அவ் வளவுதான். -

அக்கா! இந்தப் பாவியின் உயிர் இன்னும் இருக் கிறதே! நேற்று அண்ணன் இறந்தார்! இன்று ஆளனும் மறைந்தார். பிறந்த இடமும் புகுந்த இடமும் என்னைக் கைவிட்டுவிட்டதே அக்கா! வெற்றியோடு திரும்பும் அவருக்கு என் கையால் வீரவாகை சூட்டி மகிழலாமென்றிருத்தேனே! இன்பக் கனவெல்லாம் மணற்கோட்டையாகி விட்டதே!

செங் : களத்தில் குதித்த பிறகு, வாழ்வும் சாவும் நம்

செல் :

செங் :

கையிலா இருக்கிறது? எழுந்திரம்மா, எழுந்திரு. முகத்தைக் கழுவிகொள்.

உயிரைப் பிரிந்து உடல் மட்டும் வாழ முடியாது.

என்ன? இதென்னம்மா விபரீதமான முடிவு. கணவனை யிழந்த துயரத்தில் உன் கண்ணான செல்வனை மறந்து விட்டாயே! செல்லம், ன் வாழ்வின் மணி விளக்கல்லவா இவன்? அனைதது போன இந்தக் குடும்பத்தில், ஒளி பரப்ப இருக்கும் அவனுக்கு, உன்னைத் தவிர வேறு யார் இருச் கிறார்கள்? அவன் முகத்தைப் பார்த்தாவது உன்

மனத்தை மாற்றிக்கொள். எழுந்திரம்மா. -

(மூன்றாம் நாள் போர்பற்றிப் பறையறைவிப் போன் தெரிவிக்கிறான். முரசு ஒலிக்கிறது.'