பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரம்

81


அடைந்தது. எதிரிகளின் படைக்கு எமனம்மா, எமன். -

|முத்தம் கொடுக்கிறாள்.) அப்படிச் சொல்லடா என் செல்வமே!

அடி பாவி என்னடி இது? உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? முந்தா நாள் அண்ணனைப் பறிகொடுத்தாய்: நேற்றுக் கணவனை இழந்தாய்; இன்று உனக்கென்றிருக்கும் ஒரே மகனைப் போருக்கு அனுப்பத் துணிகிறாயே! போர்க்களத் திற்குப் போகும் பருவமா இது?

அக்கா, நம் நாட்டிற்காகப் போராட வேண்டிய இந்தச் சமயத்தில் எனக்கிருக்கும் ஒரே மகன், வீட்டுக்குள்ளிருந்து விளையாடுவதா? பகைவர் நம்மை நெருங்கி நிற்கும்போது படுகளத்துக்குச் செல்ல இயலாவிட்டால், என் மகன், ஆண்மகன் என்று யாருக்காக வாழவேண்டும்? இந்தா, இந்த வேல் உன் கையில் உள்ளளவும், நாட்டுக்காகப் போராடு மகனே! வாழ்க சோழ நாடு!

கண்ணே மணிவண்ணா? வேண்டாமடா! உன் தாய் ஏதோ வெறிக்கொண்டு பிதற்றுகிறாள். உன்னைத் தவிர அவளுக்கு வேறு யாருமில்லை. எப்படியும் நமது மன்னர் இன்று வெற்றி பெறு வார்: நீ போக வேண்டாம். ப்ோர்க்களத்தைப் பார்த்தாலே...

என்னைக் கோழையென்றா எண்ணிக் கொண் டீர்கள். வீரர் குடியில் பிறந்த வீரனம்மா நான்! படுகளத்தைக் கண்டு பயந்தா ஒடிவிடுவேன்? விலகுங்கள் அப்புறம். வாழ்க சோழ நாடு!

(மூன்றாம் நாள் போர் முடிந்து வீரர் திரும்புகின்

றனர்.' :

த.-6