பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

தமிழ்ச் செல்வம்


இன்னும் ஒரே நாள். நமது மன்னர் வெற்றி வாகை சூடிவிடுவார்.

அதில் ஐயமென்ன? இன்றே சேரர் படை சிதறுண்டு விட்டதே! மன்னனே முனைமுகத்தில் நின்று போராடியும், வெற்றி நம் பக்கம்தானே நின்றது!

சேரனும் நல்ல சூரனப்பா! திறமையாகத்தான்

போராடினான். என்ன இருந்தாலும், நம் மன்னருக் கெதிரே நிற்க முடியுமா? ஐயா! என் மகன் இன்னும் வரவில்லையே? அவனைப் பார்த்தீர்களா?

ஏனம்மா உனக்குக் கொஞ்சமாவது முன்

யோசனை வேண்டாமா? சிறு குழந்தையைப் போருக்கனுப்பி விட்டாயே! அவன் என்ன செய்வான்? பாவம் எதிரியின் வேலைக் கண்டு பயந்து போயிருப்பான். அந்த வேல் அவனது முதுகில் தாக்கிக் கொன்றிருக்கும்.

என்ன? என்ன மகன் முதுகில் காயம் பட்டு இறந் தானா? இல்லை; பொய் இப்படி நடந்திருக்கவே முடியாது. என் மகன் கோழையல்ல. கொடுங்கள் அந்த வாளை. (வீரனிடமிருந்து வாளை உருவி) இதோ...போர்க்களம் சென்று பார்க்கிறேன். என் மகன் முதுகிற் காயம்பட்டு இறந்திருந்தால் அவனுக்குப் பாலூட்டிய உறுப்பை இன்றே அறுத்தெறிகிறேன்.

(ஒடுகிறாள்.)

ஆஹா மறக்குடி மடந்தையப்பா இவள் முந்தா நாள் அண்ணனைப் பறிகொடுத்தாள். நேற்றுக் கணவனை இழந்தாள்.இன்று தன் ஒரே செல்வன் இறந்தானென்று கேட்டும், அவள் மணம் கலங்க