பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

தமிழ்ச் செல்வம்


செ

செ

செ

தமிழ்ச் செல்வம்

ஆமா...பிச்சைமுத்து எங்கே வந்தான்? அவனுக்கு 100 ரூபாய் கடன் வேனுமாம்: ஒண்ணு வட்டிக்கு நோட்டு எழுதித் தருவானாம். ஒண்ணு வட்டிக்கு நோட்டெழுதி நாக்கு வழிக் கவா? அரை வட்டிக்கு நோட்டெழுது. ஒண்ணு வட்டி வீதம் 3 வருஷத்திற்கு வட்டியைப் பிடிச்சுக் கிட்டு பாக்கியைக் கொடுத்தனுப்பு: சரிங்க மூணு பனிரெண்டு முப்பத்தாறு போசுப் பாக்கி 64 ரூபாய் கொடுத்துனுப்புகிறேனுங்க. சரி, நெல்லையெல்லாம் களஞ்சியத்திலே குவிச் சிட்டீங்களா? - ஆமாங்க. எத்தனை கலம்!... மொத்தம் 86879 கலமுங்க. சரி, பத்திரிகையை எடு. (கணக்குப்பிள்ளை ஒரு பத்திரிகையைக் கொண்டு

வந்து கொடுக்கிறான்.1 ஏங்காணும் பத்திரிகை பிரிச்சிருக்கு! நீ கூடப் பத்திரிகை படிக்கிறதுண்டோ? (கணக்குப்பிள்ளை தலையைச் சொரி ந் து கொண்டு நிற்கிறான் 1 (கொஞ்சம் கிண்டலாக) பத்திரிகை படிப்பதிலே உனக்கென்னப்பா அவ்வளவு அக்கறை? எங்கள் குடும்பத்திலே அஞ்சி பேரு இருக் கோமுங்க! நான் ஒருவன்தான் சம்பாதிக்கிறேன். என்னுடைய சம்பளம் எல்லோருடைய வயிற்றுக் கும் போதுங்களா? என் தம்பி ஒருவன் படிச்சிக் கிட்டு இருக்கான். அவனுக்கு ஏதாகிலும் வேலை கிடைக்குமான்னு பார்க்கிறேன். தினம் ஆள் தேவை' என்ற விளம்பரத்தை ஒண்னு விடாமப் படிக்கிறேனுங்க... -